மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
உத்தரபிரதேசம் வாரணாசியில் அஸ்சி கார்ட் பகுதியில் பிரதமர் மோடி விரும்பி டீ சாப்பிட்ட கடை இப்போது பிரபலமாகி விட்டது.'பப்பு சாய்' என்றழைக்கப்படும் இக்கடை 85 வருட பழமையானது. தாத்தா, அப்பாவை தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக தற்போது பேரன் சதீஷ் நடத்தி வருகிறார். 2022ல் வாரணாசி வந்த பிரதமர் மோடி இந்த டீக்கடைக்கு வந்து டீ குடித்தார். டீயின் ருசியால் கவரப்பட்ட அவர் மீண்டும் கேட்டு அருந்தினார். மோடி டீ அருந்திய கடை என்ற புகழ் பரவி, தற்போது ஒரு நாளைக்கு 500 பேர் வரை இங்கு டீ குடிக்கின்றனர். சுற்றுலா பயணியரும் கடையை பார்ப்பதற்காகவே அதிகமாக வருகின்றனர். டீ விலை 15 ரூபாய். வாரணாசியின் எந்த மூலையில் இருந்தாலும் பப்பு சாய் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோக்காரர்கள், ரிக் ஷாகாரர்கள் இங்கு அழைத்து வந்து விடுகின்றனர். சதீஷின் தந்தையை டில்லிக்கு அழைத்து பிரதமரே பாராட்டியுள்ளார். நீங்களும் காசிக்கு சென்றால் இந்த கடையில் டீ குடித்து, டீமாஸ்டர், கேஷியர் என அனைத்து பணிகளையும் பார்க்கும் சதீஷை வாழ்த்தி விட்டு வாருங்கள்.-நமது நிருபர்-
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1