உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் பிச்சை எடுக்கும் பழக்கம்: ம.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு

மக்களின் பிச்சை எடுக்கும் பழக்கம்: ம.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு

போபால்: “மக்களுக்கு இப்போது பிச்சை எடுக்கும் பழக்கம் வந்து விட்டது. பொதுக்கூட்ட மேடைகளில் தலைவர்களுக்கு மாலை போட்டு, அவர்களின் கைகளில் மனுக்களை கொடுக்கும் தவறான பழக்கத்தை பின்பற்றுகின்றனர்,” என, மத்திய பிரதேச அமைச்சர் பிரஹலாத் படேல் கூறினார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மோகன் யாதவ் தலைமையிலான அரசு உள்ளது. அங்குள்ள ராஜ்கார் மாவட்டத்தில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற, மாநில கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் பேசியதாவது:மக்களுக்கு இப்போது பிச்சை எடுக்கும் பழக்கம் வந்து விட்டது. எந்த பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி; அதில் பங்கேற்கும் தலைவரிடம், மனுவை கொடுத்து நிறைவேற்ற வலியுறுத்துகின்றனர். இது, நல்ல பழக்கமல்ல. பிறரிடம் இருந்து வாங்குவதை விட, கொடுப்பவராகத் தான் இருக்க வேண்டும். அப்படி செய்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்; நாகரிகமான சமுதாயம் ஏற்படும்.மக்களுக்கு இலவசங்களை அள்ளிக் கொடுத்து அவர்களை பாழாக்கி விட்டனர். இலவசங்களை கொடுத்தால் சமுதாயத்திற்கு பலம் ஏற்பட வேண்டும். ஆனால், பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டனர். இலவசங்களை கேட்டு பெறுவது அழகல்ல. வீரன் என்றாவது, பிறரிடம் இருந்து பிச்சை எடுத்தான் என கேள்விப்பட்டுள்ளீர்களா?நானும் மக்களிடம் பிச்சை எடுத்துள்ளேன். எனக்காக அல்ல. நர்மதா பரிகிரமா பக்தர்களுக்காக கேட்டுள்ளேன். எனக்கு இவ்வளவு பணம் கொடுத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கண்டனம்

அமைச்சரின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.“பா.ஜ.,வின் அராஜகம் அதிகரித்து விட்டது. என்ன தைரியத்தில் அவர்கள், மக்களை பிச்சைக்காரர்கள் என்கின்றனர்? அன்றாட வாழ்க்கையை ஓட்ட, கடினமாக உழைக்கும் மக்களுக்கு இது அவமானம். ''விரைவில் பா.ஜ., தலைவர்கள் மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வருவர். அப்போது அவர்களுக்கு தக்க பாடத்தை கற்பிக்க வேண்டும்,” என, ம.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ஜீட்டு பட்வாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Dharmavaan
மார் 03, 2025 17:00

ஓட்டு பிச்சைக்காரன் பிச்சை போடுபவனை பிச்சைக்காரன் ஏன்கிறான்


அப்பாவி
மார் 03, 2025 16:06

பிச்சை கொண்டு ய்ண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை. அச்சமல்லை. அச்சம் என்பதில்லையே. பாரதியார்.


Azar Mufeen
மார் 03, 2025 15:52

அப்புச்சிக்கு 2018ல காங்கிரஸ் எம் எல் ஏக்கள் கிட்ட பிச்சை எடுத்துதது மறந்துடுச்சி போல


Mecca Shivan
மார் 03, 2025 11:46

மனு கொடுப்பது பிச்சை என்றால் நீ தேர்தல் சமயத்தில் எடுப்பது என்ன கௌரவ பிச்சையா? மக்கள் மனுகொடுத்தாலும் நிறைவேற்றாத அரசுக்கள் இருந்தாலும் ஒண்ணுதான் இல்லாவிட்டாலும் ஒண்ணுதான் .. மக்கள் மனுகொடுத்துதான் ஒரு பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்றால் நீ உடனே பதவி விலகு


Sidharth
மார் 03, 2025 11:11

கோயிலுக்கு உள்ளே எடுப்பவர்களை பற்றி ஏதாவது சொல்லிருக்காரா


RAVINDRAN.G
மார் 03, 2025 10:22

ஓட்டுக்கு பணம் வாங்கினால் அது பிச்சைக்குத்தான் சமம். உனக்கு காசு கொடுத்து ஓட்டு கேட்பவன் பதவிக்கு வந்தால் எவ்வளவு சுரண்டுவான் என்பதை வாக்காளர்கள் சற்று எண்ணி பார்க்க வேண்டும். இலவசம் நல்ல விஷயத்துக்கு பயன்பட்டால் சைக்கிள் மடிக்கணினி போன்றவை குடும்பம் பயன்பெறும். ஆனால் இலவச அரிசி போன்ற திட்டங்கள் மக்களை சோம்பேறியாகும். உடல் பலம் போய்விடும். உழைக்கும் எண்ணமே வராது. பிறகு வடக்கன் வந்து எங்க ஏரியாவில் கடை போட்டுட்டான் எங்க வேலையே தட்டி பறிக்கிறான் என்று கூச்சல் போடுகின்றார்கள். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைகிறது. நீ ஒழுங்கா வேலை செய்தால் அவர்கள் ஏன் இங்கு வந்து வாழப்போகிறார்கள் . நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை பிறகு எப்படி நம் குடும்பம் முன்னேறும்? குடிப்பழக்கம் போன்றவைகள் அவர்களிடம் பெரும்பாலும் இல்லை .அதனால் பெரிய அளவில் சேமிக்க முடிகிறது . இங்கு குடிப்பழக்கம் குடும்பத்தையே சீரழிக்கிறது. ஆகவே உள்ளதை யதார்த்தமா சொன்னால் கோவம் கொள்ளாமல் சிந்தித்து பார்க்கவேண்டும்


baala
மார் 03, 2025 09:50

அரசியல்வாதிகளே மக்கள் போட்ட பிச்சையில் பதவி.


kulandai kannan
மார் 03, 2025 09:18

அந்த ஊர் சீமான்


N.Purushothaman
மார் 03, 2025 08:32

ஒரு காலத்துல இயலாதவர்கள், துறவிகள் ,ஞானிகள் தவிர வேறு யாரும் யாசகம் கேப்பதில்லை ....ஆனால் இன்று நிலைமையே வேறு.....தற்போதைய எளிய வழியாக யாசகம் கேட்பது மாறி உள்ளது ...அதில் இளம் வயது முதல் அனைவரும் போகுமிடமெல்லாம் கேக்கிறார்கள்..... எப்படித்தான் தான் சுயமரியாதையை விட்டு கொடுத்து இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை ....இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் புரோக்கர்கள் .... எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள் ....அமைச்சர் சொன்னது ஒரு விதத்தில் சரி என்றாலும் மனு கொடுப்பது தவறு அல்ல ....இயலாதவர்கள் கேக்கிறார்கள் ....சமூக நலத்துறையின் பொறுப்பு அது ...அந்த மனு தீர்விற்கு உகந்ததா இல்லையா என்பதை அந்த நலத்துறை முடிவு செய்து தீர்வு காண வேண்டும் ....அதை தான் மாவட்ட ஆட்சியர்கள் மாதம் ஒரு முறை செய்கிறார்கள் ...


Barakat Ali
மார் 03, 2025 08:19

இப்படி பட்டு ன்னு உண்மையைப் போட்டு உடைச்சா எப்படி ???? பணத்துக்கும், சரக்குக்கும் , பிரியாணிக்கும் இங்கே எழுதுறவங்க உங்களைக் காய்ச்சி எடுப்பாங்க பாருங்க .......


baala
மார் 03, 2025 09:52

உண்மையைக்கு புறம்பாக பொய்யான பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து எழுதும் கூட்டம் தளத்தில் அதிகமாகிவிட்டது சகோ.


Apposthalan samlin
மார் 03, 2025 10:51

சங்கி