உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாடு செல்ல இந்திராணிக்கு மும்பை ஐகோர்ட் அனுமதி

வெளிநாடு செல்ல இந்திராணிக்கு மும்பை ஐகோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி வெளிநாடு செல்ல மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தனியார் 'டிவி சேனல்' உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை 2012ல் கொலை செய்ததாக இந்திராணி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2015ல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்த வருகிறது.2019ல் பீட்டர் முகர்ஜி ஜாமின் பெற்றார்.2022-ம் ஆண்டு இந்திராணி முகர்ஜி ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு தடை விதித்தது.இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எஸ்.வி. கோட்வால் தலைமையில் பெஞ்ச் , இந்திராணிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து வெளிநாடு செல்ல அனுமதித்தது. வழக்கை மீண்டும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாலா
ஜூலை 23, 2024 22:31

நம் நாட்டில் இந்த சட்டத்துறையை தான் முதலில் களையெடுக்க வேண்டும்.


Edi Shivaji
ஜூலை 24, 2024 00:05

நானும் ஆமோதிக்கிறேன்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை