உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பைக்கு ரெட் அலெர்ட் பள்ளிகள் நேற்றும் மூடல்

மும்பைக்கு ரெட் அலெர்ட் பள்ளிகள் நேற்றும் மூடல்

மும்பை, மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தலைநகர் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.இதனால், முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் வழிந்தோடுகிறது.ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என, பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், ரயில், விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேக்கத்தால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.மேலும், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். மும்பை, தானே, நவி மும்பை, பன்வால், புனே உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மும்பை, ரத்னகிரி, ராய்கட், புனே, சிந்து துர்க் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ