உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக வலைதளங்களில் கணக்கு துவக்கிய மைசூரு பா.ஜ., - காங்., வேட்பாளர்கள்

சமூக வலைதளங்களில் கணக்கு துவக்கிய மைசூரு பா.ஜ., - காங்., வேட்பாளர்கள்

மைசூரு: முதல் முறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்களின் ஓட்டுகளை கவர, பா.ஜ., காங்கிரஸ் உறுப்பினர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும் மொபைல் போனில் தங்கள் உலகை ரசித்து வருகின்றனர். பலரும் முகநுால், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து உள்ளனர்.

புதிய கணக்கு

மன்னர் யதுவீர், முகநுாலை மட்டுமே பயன்படுத்தி வந்தார். பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், 'எக்ஸ், இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளங்களில் கணக்கை துவக்கியுள்ளார்.முகநுாலில் தனது தனிப்பட்ட கணக்கை தவிர, தற்போது யதுவீர் பி.ஜே.பி., என்ற புதிய கணக்கை திறந்துள்ளார். அதில் மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களின் போஸ்டர்களை பகிர்ந்துள்ளார்.காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக மட்டும் இருந்த வரை லட்சுமண், சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் எந்த கணக்கையும் திறக்கவில்லை. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் முகநுால், எக்ஸ், இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் கணக்குகளை துவக்கியுள்ளார்.சமூக வலைதளங்களில் மாநில காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களை பெரிதும் முன்னிலைப்படுத்தி வருகிறார். இதை நிர்வகிக்க, பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்களின் புகைப்பட படங்கள், பிரசார வீடியோக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வீடியோக்கள், அறிக்கைகள், தலைவர்கள் சந்திப்பு போன்ற விபரங்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.இதை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதன் மூலம் இளம் வாக்காளர்களை கவரத் திட்டமிடுகின்றனர்.ஏப்., 4ம் தேதி நிலவரப்படி, மன்னர் யதுவீரின் தனிப்பட்ட முகநுாலான 'யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார்' என்ற கணக்கை 3.51 லட்சம் பேரும்; கட்சி சார்பில் துவங்கப்பட்ட 'யதுவீர் பி.ஜே.பி.,'யை 1,700 பேரும் பின்தொடர்கின்றனர். 'எக்ஸ்' கணக்கை, 2,228 பேரும்; இன்ஸ்டாகிராமில் இவரை 1.78 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.காங்கிரசின் லட்சுமணின் முகநுாலில் 7,500 பேரும்; இன்ஸ்டாகிராமில் 347 பேரும்; எக்ஸ் பக்கத்தை 12 பேரும் பின் தொடர்கின்றனர்.கட்சி தலைவர்கள் கூறியதாவது:பாரம்பரிய விளம்பரங்களுடன் தொழில்நுட்ப வளர்ச்சி உலகில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். தொகுதியின் அனைத்து கிராமங்கள், நகரங்களுக்குச் செல்ல முடியாது. எனவே, சமூக ஊடகங்களை பயன்படுத்தி, விளம்பரம் செய்யப்படுகிறது.

முயற்சி முக்கியம்

தற்போது பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். அத்தகையவர்களை சென்றடைய இந்த முயற்சி முக்கியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ