உள்ளூர் செய்திகள்

தேசியம்

மக்கள் நம்பமாட்டார்கள்!இண்டியா கூட்டணி கூறும் உத்தரவாதங்கள் அனைத்தும் பொய் மூட்டைகள். கடந்த தேர்தலில் ஐந்து லட்சம் பேருக்கு அரசு வேலை போன்ற உத்தரவாதங்களை வழங்கினர். ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. தற்போது புதிதாக உத்தரவாதம் தருகின்றனர். மக்கள் இந்த முறை நம்பமாட்டார்கள்.சிவ்ராஜ் சிங் சவுகான்மத்திய அமைச்சர், பா.ஜ.,டிரம்ப் வருவது நல்லது!அமெரிக்க அதிபராக டிரம்ப் வருவது நம் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும். அவர், சீனாவுடன் கடுமையாக நடப்பவர். நமக்கும், சீனாவுக்கும் பிரச்னை உள்ளது. மேலும், பிரதமர் மோடியுடன் டிரம்பிற்கு நல்ல நட்பு இருப்பது அனைவரும் அறிந்தது. இது, இருநாட்டு தலைவர்களிடையே சாதகமான விஷயம்.சசி தரூர்லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்ராகுலால் ஆபத்து!ராகுல் கூட்டணி அமைக்கும் விதம் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் ஆபத்தானது. பாரத் ஜோடோ என்ற பெயரில் அவர் துவங்கிய யாத்திரையில், 150 இயக்கங்கள் பங்கேற்றன. அதில், 100 இயக்கங்கள் தீவிர இடதுசாரிகள், அராஜகவாதிகள். அவர்களின் பின்புலத்தை விசாரித்தால் சமூக விரோதிகளாக இருப்பர்.தேவேந்திர பட்னவிஸ்மஹா., துணை முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ