உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

அரசியலில் சேர விருப்பம்!அமேதி மக்களின் குரலாக நான் இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். நானும் அரசியலில் சேர ஆர்வமாக உள்ளேன். அது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இப்போதைக்கு அவசரம் இல்லை.ராபர்ட் வாத்ராபிரியங்கா கணவர்சர்வாதிகாரத்தை அழிப்போம்!மஹாராஷ்டிராவின் மூலை முடுக்கெல்லாம் தீப்பந்தம் சின்னம் சென்று சேர்ந்துள்ளது. இந்த தீப்பந்தம் சர்வாதிகார ஆட்சியை சாம்பலாக்கும். கடந்த ஆண்டு அந்தேரி இடைத்தேர்தலில் இந்த சின்னத்தைப் பயன்படுத்தி தான் வெற்றி பெற்றோம். உத்தவ் தாக்கரேதலைவர், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாஇரண்டாம் தர குடிமக்கள்!ராம நவமி தினத்தை, பா.ஜ.,வினர் கலவரம் நடத்தும் நாள் என்று மம்தா பானர்ஜி கூறியது, வெட்கக்கேடானது. திரிணமுல் காங்கிரஸ் ஹிந்துக்களை அவர்களது சொந்த மண்ணில் இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முயற்சிக்கிறது.சுகந்த மஜும்தார்தலைவர், மே.வங்க பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ