தேசியம் பேட்டி
மனைவியை நிறுத்தியது தவறு!லோக்சபா தேர்தலில் பாரமதி தொகுதியில் என் சகோதரி சுப்ரியா சுலேவுக்கு எதிராக, என் மனைவி சுனேத்ராவை நிறுத்தி தவறு செய்துவிட்டதாக உணர்கிறேன். அரசியலை வீட்டுக்குள் கொண்டு வந்திருக்க கூடாது. அஜித் பவார்மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்கிரஸ் பலம் அதிகரித்ததால் அட்டகாசம்!சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சிலர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமாஜ்வாதி பாதுகாப்பு கொடுக்கிறது. அகிலேஷ் - ராகுலின் பலம் அதிகரித்ததிலிருந்து குற்றவாளிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.சுதன்ஷு திரிவேதிசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,முதலீட்டாளர்கள் பணத்துக்கு ஆபத்து!பங்குச் சந்தையில் பணம் போட்டுள்ள சிறு முதலீட்டாளர்களின் பணத்தை ஆபத்தில் விட முடியாது. மோடி அரசு உடனடியாக, சர்ச்சையில் சிக்கியுள்ள பங்குச்சந்தை கட்டுப்பாட்டு நிறுவமான செபியின் தலைவரை பதவி விலகச் செய்ய வேண்டும். மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்