உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

இதுவா வளர்ந்த பாரதம்?நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் நுகர்வு சார்ந்தது. ஆனால், மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் அடிப்படை தேவைகளுக்கு கூட செலவிட முடியாமல் உள்ளனர். சாதாரண மக்களின் பாக்கெட்டை காலியாக்கி, பணக்காரர்களின் பாக்கெட்டை நிரப்புவதா உங்களின் வளர்ந்த பாரதம்?மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்இதுபோல் நடந்ததில்லை!டில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ., சர்வாதிகாரமாக செயல்படுகிறது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர். அவர்களை சட்டசபை வளாகத்துக்குள் கூட நுழைய அனுமதிக்கவில்லை. டில்லி சட்டசபை வரலாற்றில் இதுபோல் இதுவரை நடந்ததில்லை.ஆதிஷிடில்லி முன்னாள் முதல்வர், ஆம் ஆத்மிபோலி வாக்காளர் பட்டியல்!தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் அமர்ந்து, பா.ஜ.,வினர் ஆன்லைனில் போலி வாக்காளர் பட்டியலை உருவாக்குகின்றனர். மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுஉள்ளனர். மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ