மேலும் செய்திகள்
3 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
11-Feb-2025
பாஹ்ரைச்:நம் அண்டை நாடான நேபாளத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் பாஹ்ரைச் எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சஷாஸ்திர சீமா பால் வீரர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இந்திய - நேபாள எல்லையில் ரூபைடிஹா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து 9.9 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் நேபாளத்தின் ரூல்பா மாவட்டத்தைச் சேர்ந்த கோர் கர்தி மகர், 50, என்பது தெரியவந்தது. அவர் அங்கிருந்து ஹிமாச்சலின் மணாலிக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை உடலில் அணிந்திருந்த ஜாக்கெட்டில் மறைத்து கடத்தி சென்றதும் தெரியவந்தது.
11-Feb-2025