வாலிபரை சுட்ட 2 பேருக்கு வலை
நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில், வாலிபரை துப்பாக்கியால் சுட்ட இருவரை போலீசார் தேடுகின்றனர்.நொய்டாவின் சூரஜ்பூர் அருகே ஜெய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்,28. நேற்று முன் தினம் மாலை நடந்து சென்று கொண்டிருந்த சுமித் மீது, எதிரில் பைக்கில் வந்த இருவர், துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.காலில் குண்டு பாய்ந்த நிலையில் சரிந்து விழுந்த சுமித்தை, கிராம மக்கள் மீட்டு மருத்துவமனியில் சேர்த்தனர்.இதுகுறித்து, சூரஜ்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.