உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி: சம்பாய் சோரன் திட்டம்

இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி: சம்பாய் சோரன் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: புதிய கட்சியை துவக்குவது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்போவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.கடந்த ஜூனில் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார் .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் டில்லி சென்றார் சம்பாய் சோரன், தொடர்ந்து பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அதிருப்தியில் உள்ள சம்பாய்சோரன் தனது அடுத்த நகர்வாக புதிய கட்சியை துவக்கி பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது, அல்லது அரசியலிலிருந்து விலகுவது, அல்லது பா.ஜ.வில் இணைவது என மூன்று வாய்ப்புகளில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.இது குறித்து சம்பாய் சோரன் கூறியதாவது: புதிய அமைப்பை உருவாக்கி அதனை வலுப்படுத்துவேன், இன்னும் ஒரு வாரத்தில் முடிவை அறிவிப்பேன். ஆனால் அரசியலில் இருந்து ஒய்வு பெற மாட்டேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Gopalakrishnan
ஆக 21, 2024 23:29

பிஹாரில் திரு. சீதாராம் மாஞ்சி ஒருவர் நமது ஓ. பன்னீர்செல்வம் ஐயா போல சில மாதங்களுக்கு முதல் மந்திரியாக இருந்தார். பின் பதவி விலக்கப்பட்டதும் தனிக்கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். அது போலத்தான் இதுவும்.


T.sthivinayagam
ஆக 21, 2024 20:45

பிரபஞ்ச சூட்மத்தில் சிக்கிய சம்பாய் சோரன்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை