உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய மத்திய அமைச்சர்கள் டில்லியில் பொறுப்பேற்பு

புதிய மத்திய அமைச்சர்கள் டில்லியில் பொறுப்பேற்பு

கர்நாடகாவில் இருந்து மத்திய அமைச்சர்கள் ஆன, குமாரசாமி உட்பட நான்கு பேரும், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 அமைச்சரவையில், கர்நாடகாவில் இருந்து குமாரசாமி, பிரஹலாத் ஜோஷி கேபினட் அமைச்சர்களாகவும், சோமண்ணா, ஷோபா இணை அமைச்சர்களாகவும் இடம் பெற்று உள்ளனர். குமாரசாமிக்கு கனரக தொழில்கள், உருக்கு; பிரஹலாத் ஜோஷிக்கு நுகர்வோர் விவகார துறை, உணவு மற்றும் பொது வினியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இணை அமைச்சர்கள் சோமண்ணாவுக்கு ஜல்சக்தி மற்றும் ரயில்வே, ஷோபாவுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இவர்கள் நால்வரும் புதுடில்லியில் தங்களது அமைச்சர் அலுவலகத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து, பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி