பெங்களூரு: மூடா முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து, மைசூரு வரை பா.ஜ., பாதயாத்திரை நடத்தியது. அதே போன்று வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டை கண்டித்து, பெங்களூரில் இருந்து பல்லாரிக்கு பாதயாத்திரை நடத்த பா.ஜ., ஆலோசிக்கிறது.மூடா எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான வீட்டுமனைகள் வழங்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கும், 14 மனைகள் வழங்கியதாக தகவல் வெளியானது. இது மாநிலத்தில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் நெருக்கடியில் சிக்கியுள்ளார். பொதுக்கூட்டம்
'மூடா' முறைகேட்டை அஸ்திரமாக பயன்படுத்தி, அவரை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ., - ம.ஜ.த., முயற்சிக்கின்றன. இதற்காக, பெங்களூரில் இருந்து மைசூரு வரை கூட்டணி கட்சிகள் பாதயாத்திரை நடத்தின. மைசூரில் பொதுக்கூட்டமும் நடத்தின. இந்த பாதயாத்திரை வெற்றி அடைந்துள்ளது.இதனால் உற்சாகமடைந்த பா.ஜ., வால்மீகி மேம்பட்டு ஆணைய முறைகேட்டை முன் வைத்து, பெங்களூரில் இருந்து பல்லாரி வரை, பாதயாத்திரை நடத்த ஆலோசிக்கிறது.இதற்கு முன் சட்டவிரோத சுரங்கத்தொழிலை கண்டித்து, பல்லாரிக்கு பாதயாத்திரை நடத்தினார். இது அவரது செல்வாக்கை அதிகரித்தது. முதல்வர் பதவியிலும் அமர காரணமாக இருந்தது. இதை மனதில் கொண்டு, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டை முன் வைத்து, பல்லாரிக்கு பாதயாத்தரை நடத்த பா.ஜ., ஆலோசிக்கிறது. வால்மீகி சமுதாயத்தினரின் பணத்தை, அரசு லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தியது, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததை விவரிப்பது, கட்சியின் திட்டமாகும்.இது குறித்து, முன்னாள் எம்.பி., ஸ்ரீராமுலு கூறியதாவது:வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. எனவே பல்லாரிக்கு பாதயாத்திரை நடத்த ஆலோசிக்கிறோம். பீதரில் இருந்து பல்லாரி வரை பாதயாத்திரை நடத்துவதா அல்லது பல்லாரியில் இருந்து சித்ரதுர்காவுக்கு பாதயாத்திரை நடத்துவதா என, இன்னும் முடிவு செய்யவில்லை. ஒருங்கிணைப்பு குழு
இது தொடர்பாக, எங்களின் டில்லி தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு சொந்தமான 25,000 கோடி ரூபாயை, மாநில அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது.யாத்கிரியில் எஸ்.ஐ., பரசுராம் தற்கொலை உட்பட கல்யாண கர்நாடகாவில், பல பிரச்னைகள் உள்ளன. நியாயம் கேட்டு நாங்கள் போராடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.