மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூரில் உள்ள ஐ.டி., மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், வார இறுதி விடுமுறை நாட்களில், மன அமைதிக்காக எங்கேயாவது சென்று வரலாம் என்று நினைப்பர். குறிப்பாக மலையேற்றத்தில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது நிஜகல் பெட்டா.பெங்களூரு ரூரல் நெலமங்களா தாபஸ்பேட்டில் உள்ளது நிஜகல் பெட்டா மலை. இந்த மலை அமைந்து உள்ள இடத்தில் 17ம் நுாற்றாண்டில் நிஜகல் கோட்டை இருந்துள்ளது. சிக்கதேவராஜ உடையார் என்பவர் கட்டி உள்ளார். கோட்டைக்கு செல்லும் வழியில் ஆஞ்சநேயர் கோவில், இரண்டு தர்காக்கள், பழங்கால கோவில்கள் அமைந்து உள்ளன. ஆனால் சரியாக பராமரிக்காததால் சிதிலமடைந்து உள்ளன. ஆனாலும் இன்னும் கம்பீரம் மாறாமல் அப்படியே உள்ளன.தற்போது, நிஜகல் கோட்டை மலையேற்றம் செல்லும் இடமாக உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு 3,280 அடி ஆகும். இங்கு மலையேற்றம் செல்வதற்கு குறிப்பிட்ட காலம் எதுவும் இல்லை. அனைத்து நாட்களிலும் செல்லலாம். பருவமழைக்கு பின்னர் சென்றால் பச்சை, பசலேன சூழலை காணலாம். பொதுவாக மழைக்காலத்தில் மலைகள் ஈரப்பதமாக இருப்பதால், மலையேற்றம் செல்ல முடியாது.ஆனால் இங்கு அந்த பிரச்னை இல்லை. மழை பெய்யும் நேரத்திலும், எந்த சிரமமும் இன்றி மலை ஏறி விடலாம். மலை உச்சிக்கு சென்று புகைப்படம் எடுப்பதும், அடிவாரத்தில் செல்லும் ரயில், வாகனங்களை பார்ப்பதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெங்களூரில் இருந்து டாபஸ்பேட் 58 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து துமகூரு செல்லும் பஸ்சில் செல்ல வேண்டும். டாபஸ்பேட்டில் இறங்கி அங்கிருந்து, 4. கி.மீ., துாரத்தில் நிஜகல் பெட்டா உள்ளது. ஆட்டோவில் செல்லலாம். பெங்களூரில் இருந்து காரில் சென்றால் மலை அடிவாரம் வரை செல்லலாம்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7