மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கோழிக்கோடு, கேரளாவில், மன அழுத்தம் காரணமாக என்.ஐ.டி., மாணவர் ஒருவர், தான் படிக்கும் கல்லுாரி வளாகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.கேரளாவின் கோழிக்கோடு பகுதி யில் என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையத்தில் மும்பையைச் சேர்ந்த யோகேஷ்வர் நாத், 19, என்ற மாணவர் பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.அக்கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த அவர், நேற்று அதிகாலை விடுதியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார்.தகவலறிந்து சென்ற கல்லுாரி நிர்வாகிகள் மற்றும் சக மாணவர்கள், யோகேஷ்வரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே யோகேஷ்வர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அம்மாணவனின் அறையில் சோதனை நடத்தினர். அப்போது, எந்த தற்கொலை கடிதமும் சிக்கவில்லை.எனினும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யோகேஷ்வர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை செய்யும் முடிவை தன் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1