உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசை விட நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

காங்கிரசை விட நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: 'காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி, சோனாபட் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் விவசாயத்துறையில் ஹரியானா முன்னணி மாநிலமாக மாறி உள்ளது. பா.ஜ., இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வை அமோக வெற்றி பெற ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஊழல் விவகாரத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்கொள்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=671v7wxm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இடஒதுக்கீடு

காங்கிரசுக்கு ஓட்டளிப்பது என்பது ஹரியானாவின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை பணயம் வைப்பதாகும். தவறுதலாகக் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது மாநிலத்தையே அழித்துவிடும். காங்., அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைதி பிடிக்காது. காஷ்மீரில் மீண்டும் 370வது சட்டப்பிரிவை கொண்டுவர விரும்புகிறார்கள். இடஒதுக்கீடு மீதான வெறுப்பு காங்கிரசின் டி.என்.ஏ.,வில் உள்ளது.

ஆதரவு பெருகுது!

காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது. இன்று எதுவாக இருந்தாலும், அதில் ஹரியானாவின் பங்களிப்பு அளப்பரியது என்று பெருமையுடன் கூறுகிறேன். ஹரியானாவில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் நெருங்கி வருவதால், பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
செப் 26, 2024 08:20

உண்மை தான்.... கான் கிராஸ் கட்சி நாட்டு மக்கள் யாருக்கும் உண்மையாக இருக்கவில்லை.... அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்..... இல்லையென்றால் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும்... காஷ்மீர் மாநிலத்தில் SC... ST... மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்காமல் இருந்து இருப்பார்களா ??? ஆனால் கான் கிராஸ் கட்சி பப்பு....தான் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களின் ரட்சகர் போல் சீன் போட்டு கொண்டு திரிகிறார்.... மக்களுக்கு உண்மை தெரியாது என்று நினைத்து விட்டார்.


kantharvan
செப் 25, 2024 19:59

மகா பிரபு நீங்கள் இங்கே வந்துடீங்களா?? ருசியா உக்ரனே, காசா இஸ்ரேலிய பிரச்சினைகளுக்கு எல்லாம் உங்களை விட்டா வேற யாரால தீர்ப்பு சொல்ல முடியும் ?


karthik
செப் 25, 2024 18:43

சாத்தியமான வார்த்தை..


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 16:17

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் ஓய்வு எடுத்து வீண் பொழுது போக்கவில்லை இந்த எழுபத்து நான்கு வயது இளைஞர் ..... ஆனால் ஹரியானாவுக்கு செய்யப்போவது என்ன என்பதை மட்டும் ஹைலைட் செய்து பேசியிருக்கலாம் ..... ஒவ்வொரு தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் காங்கிரசை குறைசொல்வதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தது போலாகிவிடும் ....


தஞ்சை மன்னர்
செப் 25, 2024 16:13

காங்கிரஸ் விடுங்க பாஸ் இப்பயெல்லாம் நீங்க ஆர் எஸ் எஸ் பற்றியெல்லாம் ஏதும் சொல்லுவதே இல்லையே ஏன்


RAMAKRISHNAN NATESAN
செப் 25, 2024 17:46

ஆர் எஸ் எஸ் ன்னா தண்டுவடம் முழுவதும் ஐஸ்கட்டியை வெச்சு நெருடியது போல் இருக்குதா ??


சாமிநாதன்,மன்னார்குடி
செப் 25, 2024 19:32

விரைவில் வரப் போகிறது பெரிய ஆப்பு


தஞ்சை மன்னர்
செப் 25, 2024 16:10

ஹி ஹி அவர்கள் வாயை மூடி இருக்கின்றார்கள் என்று எதையாவது உளறிக்கொண்டே இருக்கன்வேண்டியது அப்புறம் அவர்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அமெரிக்கா அப்புறம் வெளிநாட்டு போய் மேரா பச்சவோ , மேரா பேட்டியோ , மேரா மாவோ அப்புறம் ஏழைத்தாய் மகன் என்று நீலி கண்ணீர் விட்டு கதறி புலம்ப வேண்டியது


சிவம்
செப் 25, 2024 15:32

காங்கிரஸ் பற்றி மோடிஜி மிக மென்மையான வார்த்தையில் சொல்லியிருக்கிறார். தேச துரோகி கட்சி என்று சொல்லியிருக்க வேண்டும். அதன் எதிர் கட்சி தலைவர் வெளிநாடு சென்று இந்தியாவை தன் எதிரி நாடு போல் பேசியிருக்கிறார். இந்த கருத்தை பாகிஸ்தான் மீடியாவில் ஒருவர் சொல்லியிருக்கிறார். காங்கிரசின் 10 வருட பொம்மலாட்ட அரசில் தானும் தன் கூட்டணி கட்சிகளின் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டியிருகிறார்கள். ரூபாய் அச்சிடும் இயந்திரத்தின் எதிரி நாட்டிற்கு விற்கும் அளவிற்கு காங்கிரஸ் அரசு தரம் கேட்டு போனது. காங்கிரஸ் கட்சி இந்திய தேசத்தின் அவமானம்.


SRIRAMA ANU
செப் 25, 2024 15:11

பாரத பிதா மகனாகிய நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு பொய்யும் புரட்டும் பஞ்சம் இருக்காது என்பது நிதர்சன உண்மை.


hari
செப் 25, 2024 16:09

ராமனின் பெயரை வைத்துக்கொண்டு எவ்வளவு கூவினாலும் 200 ரூபாய் தான் கூலி


முக்கிய வீடியோ