உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகா சிவராத்திரியன்று அசைவ உணவா? பல்கலையில் மாணவர்களிடையே மோதல்

மகா சிவராத்திரியன்று அசைவ உணவா? பல்கலையில் மாணவர்களிடையே மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மகா சிவராத்திரியின் போது அசைவ உணவு வழங்கியதாக, டில்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலையில் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. உலகம் முழுவதும் உள்ள ஹிந்து சமூக மக்களால் சிவராத்திரி நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று இரவு முதலே கோவில்களில் திரண்ட மக்கள், சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். இந்த நிலையில், மகா சிவராத்திரி தினமான நேற்று தெற்கு ஆசிய பல்கலையில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாகக் கூறி, எஸ்.எப்.ஐ., மற்றும் ஏ.பி.வி.பி., மாணவர்கள் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தெற்கு ஆசிய பல்கலையின் உணவகத்தில் மாணவி ஒருவரை தாக்குவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. உணவு பரிமாறுவதில் பிரச்னை ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி போலீசாருக்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக உண்மை நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகா சிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்ததாகவும், இதனை ஏற்காத மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எஸ்.எப்.ஐ., அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல, விரதம் இருக்கும் மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அசைவ உணவை கொடுத்ததால் தான் பிரச்னை ஏற்பட்டதாக ஏ.பி.வி.பி., அமைப்பினர் பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் தரப்பில் எந்தவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை என்று டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்கலை நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

jayvee
பிப் 28, 2025 07:00

உணவை வைத்து அரசியல் செய்வது ஹிந்துக்களுக்கு புதிதல்ல


சுரேஷ்சிங்
பிப் 27, 2025 19:55

சிவனுக்கே மா மிசம் படைத்தவர் கண்ணப்பர். தன் மகனையே அரிந்து தலையை ஆக்கிப்போட்டவர் சிறுத்தொண்டர். வரலாறு தெரியாம பேசக்கூடாது.


sankar
பிப் 28, 2025 13:15

சூப்பர் இருநூறு


அப்பாவி
பிப் 27, 2025 19:51

அடபாவிங்களா... மகாசிவராத்திரி அன்னிக்கி பச்சைத் தண்ணி பல்லில படாம ஒண்ணும் சாப்புடாம விரதம் இருக்கணும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 27, 2025 15:20

110கோடி மக்களில், அந்த பொண்ணு அசைவம் சாப்பிடுவதைத் சிவபெருமான் பாத்துண்டிருந்தாரா? டெல்லி மால்களில் இருக்கும் Food court களில், மஹா சிவராத்திரி அன்று அசைவ உணவுகள் கிடைத்தனவே அங்கே போய் கலாட்டா பண்ணுவார்களா?? என்னத்த நசுக்க வேண்டும் என்று குதிக்கிறீர்கள்?? டெல்லி Marriot ஹோட்டலில் மஹா சிவராத்திரி அன்று அசைவம் சமைத்து பரிமாறுகிறார்கள். அங்கே போயி, இந்த ஹிந்துக்கள் கும்பல் ஏதாச்சும் கலாட்டா பண்ணுவார்களா? ஏதாவது மதக் கலவரம் பண்ணவே இதுங்களை இதுங்களோட அப்பன் ஆத்தா பெத்து போட்டிருக்காங்க போல.


visu
பிப் 27, 2025 16:31

பைத்தியம்


thanjai NRS krish
பிப் 27, 2025 16:59

இந்து பெயரை வைத்துக் கொண்டு எப்பொழுதும் இந்துக்களுக்கு எதிராகவும் இந்த தேசத்துக்கு எதிராக பேசும் இந்த நபரை எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.மேலும் இந்த நபர் மாற்று மதத்தவர்களை விமர்சிப்பதில்லை.அவர்கள் எல்லோரும் மகான்களா?


Barakat Ali
பிப் 28, 2025 14:04

வளைகுடா நாடுகளில், ஏன் சவுதியில் கூட பிலிப்பினோக்கள் நமக்கு என்னென்ன ஹராமோ அவையெல்லாம் தேடிப்பிடித்து உண்கிறார்கள் ..... அக்மார்க் இஸ்லாமியர்கள் அங்கே உண்டு ..... என்ன செய்ய முடிகிறது????


J.Isaac
பிப் 27, 2025 14:46

உணவு அவரவர் விருப்பம். மொழி அவரவர் விருப்பம் மதம் அவரவர் விருப்பம்.


GSR
பிப் 27, 2025 21:54

கரிக்கிட்....நீ.. கரிக்கிட் ஐசாக்கு.....அப்பிடியேகொஞ்சமா திரும்பி முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி கல்லூரி விடுதியில் பன்றி கறி போட சொல்ல தில் இருக்கா ஐசாக்கு? அங்கு பன்றி கறி குன்ற கிறீஸ்டீனையும். இந்துக்களையும் சேர்த்து கொள்வது இல்லையா அல்லது அப்படி சேர்ந்த இந்த இரண்டு குரூப்பும் பன்றி கறி சாப்பிடுவது அவரவர் விருப்பம் என கூவி கூவி துன்றாங்களோ? அல்லது அப்படியே இறுக்கமா ...... போறாங்களோ?


Kumar Kumzi
பிப் 27, 2025 14:43

கலவரம் பண்ணும் மூர்க்க காட்டுமிராண்டிகளை பாகிஸ்தானுக்கு உதைத்து விரட்டுங்கள்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 27, 2025 15:26

கலவரம் பண்ணுவது ஹிந்து காட்டுமிராண்டிகள் தான் சார். செய்தியை இன்னொரு முறை படியுங்கள். இந்த ஹிந்து கவனுங்களை பிரயாக்ராஜ் ஆத்துல குளிக்க சொல்லி உதைத்து விரட்டுங்கள்.


kantharvan
பிப் 27, 2025 16:46

ஆண்ம இல்லாத குமாரு அடங்கிரு?? இல்லன்னா


kulandai kannan
பிப் 27, 2025 13:35

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி வெடிக்கு இவ்வளவு கட்டுப்பாடு வரும் என்று எதிர்பார்த்தோமா? எதிர்காலத்தில் எதுவும் நடக்கும்.


நிஜதமிழன்
பிப் 27, 2025 13:32

குல்லா கும்பல் அட்டகாசம். இவர்கள் நசுக்க பட வேண்டும். ரெம்ப ஆணவம்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 27, 2025 15:18

குல்லா கும்பல் ல்லாம் இல்லை. 110கோடி மக்களில், அந்த பொண்ணு அசைவம் சாப்பிடுவதைத் சிவபெருமான் பாத்துண்டிருந்தாரா? டெல்லி மால்களில் இருக்கும் Food court களில், மஹா சிவராத்திரி அன்று அசைவ உணவுகள் கிடைத்தனவே அங்கே போய் கலாட்டா பண்ணுவார்களா?? என்னத்த நசுக்க வேண்டும் என்று குதிக்கிறீர்கள்?? டெல்லி Marriot ஹோட்டலில் மஹா சிவராத்திரி அன்று அசைவம் சமைத்து பரிமாறுகிறார்கள். அங்கே போயி, இந்த ஹிந்துக்கள் கும்பல் ஏதாச்சும் கலாட்டா பண்ணுவார்களா?


V வைகுண்டேஸ்வரன்
பிப் 27, 2025 15:23

யாரு அசைவம் சாப்பிட்டா உங்களுக்கு என்னய்யா? ஹிந்துக்கள் கும்பல் தான் அட்டகாசம். நசுக்கப்பட வேண்டும். ரொம்ப ஆணவம் பிடித்த ஹிந்து ரவுடிகள்.


abdulrahim
பிப் 27, 2025 15:53

கலவரம் பண்ணவே பொறந்த சங்கிகளை மறுபடியும் பாரசீகத்திற்க்கே வெரட்டணும் ...


kantharvan
பிப் 27, 2025 16:55

போலி டுமிழிசை ? எறும்புகளால் யானையை நசுக்க முடியாது?? யானை எறும்புகளை மிதிக்காமல் செல்வது எறும்பின் மீது உள்ள கருணையே அன்றி பயமல்ல?? யானையை சீண்டினால் ?? உண்மையான அட்டகாசத்தை பார்ப்பீர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 27, 2025 13:21

அசைவம் உண்ட மாணவி மீது தாக்குதல் என்று செய்தி வெளியிடுகிறது வேறொரு நாளேடு ......


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 27, 2025 13:20

இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் நோன்புக்காலத்தில் ஹோட்டல் போன்ற பொது இடங்களில் உணவருந்தியவர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். சொந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு இவ்வளவு அவலங்கள்... அவமானங்கள் .....


kantharvan
பிப் 27, 2025 16:56

அடுத்த பிறவியிலாவது மனுசனா பொறங்கடா??


சமீபத்திய செய்தி