உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புற்று நோய் குணம் அடைந்தது எப்படி; ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்

புற்று நோய் குணம் அடைந்தது எப்படி; ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய சிகிச்சையால் புற்றுநோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறிய விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மனைவிக்கு ரூ.850 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவி கவுர் புற்றுநோய் சிகிச்சை முறை குறித்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கு 5 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறிய நிலையில், 40 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாகவும் கூறினர். அதன்பிறகு, கடுமையான உணவு கட்டுப்பாடுகளின் மூலம், புற்றுநோயில் இருந்து தனது மனைவி குணமடைந்து விட்டதாகவும், மஞ்சள், வேப்பம் தண்ணீர், ஆப்பிள் வினிகர், எலுமிச்சை தண்ணீர் சாப்பிட்டதாகவும், சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்த உணவுகளையே சாப்பிட்டதாகவும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபோன்ற ஆதாரமற்ற மருத்துவ முறைகளை மேற்கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நவ்ஜோத் கவுர் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சமூகம் என்ற அமைப்பினர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததற்கான சிகிச்சை முறைகள் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில், மன்னிப்பு கேட்டு விட்டு, ரூ.850 கோடியை பி.எம்.,கேர் நிதிக்கு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக உரிய பதிலளிக்காவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்தீஸ்கர் சிவில் சமூகத்தின் ஆலோசகர் குல்திப் சோலான்கி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் சத்தீஸ்கர் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

SURESH M
டிச 03, 2024 10:10

ஆங்கில மருத்துவ கார்ப்பரேட் சகோதரர்களுக்கு வயித்தில் புளியை கரைக்குது போல ...... இது எங்கள் பாட்டன், அப்பன் செய்த சின்ன விசியம்தானே .... இதுக்கே வா எல்லோரும் பழமை விடையங்களை நோக்கி போறாங்க விடுங்க ஐயா


Sathyan
டிச 01, 2024 03:53

ஆங்கில மருத்துவர்கள் சிந்துவின் மனைவியை கைவிட்ட பிறகுதான் சித்த, ஆயுர்வேத போன்ற மற்ற பல இயற்க்கை வைத்தியத்தை நம்பிக்கையுடன் மனதார கடைபிடித்து அதன் மூலம் சிந்துவின் மனைவி பூரண குணமடைந்து நலமோடு இருக்கிறார். ஆங்கில மருத்துவர்கள் முதலில் ஏன் சிந்துவின் மனைவியை குணப்படுத்த முடியாது என்று கைவிட்டார்கள் ? அவர் என்ன ஒரு பொம்மையா அப்படியே விடுவதற்கு ? தன மனைவியை காப்பாற்றும் பக்ஷத்தில் சித்து தீவிரமாக மற்ற வைத்தியத்தை கடைபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். முதலில் சிந்துவின் மனைவியை காப்பாற்றமுடியாது என்று கூறிய ஆங்கில மருத்துவர்களை முதலில் விசாரிக்கவேண்டும் , அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்கள் என்று ? அவர்களின் பதில் சரி இல்லை என்றால் முதலில் ஒரு உயிரை காப்பாற்ற முடியாமல் போனதற்கு அந்த ஆங்கில மருத்துவர்களை கைது செய்து அவர்கள் நஷ்ட ஈடாக கேட்ட 820 கோடி ரூபாயை சிந்துவின் மனைவிக்கு கொடுக்க வேண்டும்.


M Ramachandran
நவ 30, 2024 19:54

என்னடா இது .கிணறு வெட்ட பூதம் கிளம்பிடிச்சே


Dharmavaan
நவ 29, 2024 21:42

ஆங்கில மருத்துவ கொள்ளைக்கு காரணம் கோர்ட்டின் நய. வஞ்சக பாரபட்சமான செயல் .இந்த அநியாயத்தால் திருவாங்குர் ராஜா வைத்திய சாலை ஆங்கிலேய வைத்தியத்துக்கு சவால் விட இன்று காணவில்லை.


mahalingamssva
நவ 29, 2024 16:49

நம்பிக்கைதான் வாழ்க்கை. அவர் குணமாகிவிட்டேன் என்றால் விட வேண்டியதுதானே


Sivak
நவ 29, 2024 16:09

ஆங்கில பார்மா கம்பெனிகள் சிண்டிகேட் போட்டு வேறு எந்த மருத்துவமும் முக்கியத்துவம் பெறாமல் இருக்கும்படி பார்த்து கொள்கிறார்கள் ... கேன்சர் என்பது அவர்களை பொறுத்தவரை நோயல்ல ... அது ஒரு பல ஆயிரம் கோடி பிசினஸ் ..


jayvee
நவ 29, 2024 15:56

ஆங்கில சிகிச்சை முறை ஒரு வியாபாரமாக மாறிவிட்டது .. உதாரணம் சிறு சிறு க்ளினிக் நடத்தும் டாக்டர்களும் தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர்களிடம்தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது .. மேலும் மக்கள் மருந்தக மருந்துகளுக்கு வீரியம் இல்லை என்ற புரளியை கிளப்பிவிடுவதும் அவர்களும் ஆங்கில தனியார் நிறுவுன மருந்தை விற்கும் கடைக்காரர்கள்தான் .. குறிப்பாக புற்று நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பை நீண்ட நாளுக்கு பணம்காய்ச்சும் பயிராக மாறியதும் அவர்கள்தான்.. அதே சமயத்தில் இயற்க்கை மருத்துவம் வாழ்வியல் முறை என்று சொல்லி மக்களை கொள்ளை அடிக்கும் கூட்டமும் பெருகியுள்ளது .. ஆர்கானிக் என்று சொல்லை வைத்துக்கொண்டு உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்ளை விலைக்கு விற்கும் கூட்டம் இங்கு உள்ளது.. உண்மையில் இந்தியாவில் விற்கப்படும் உலகளவில் கூட 100 சதவிகிதம் ஆர்கானிக் என்பது சாத்தியமில்லாதது .. ஒரு வேலை சிந்துவின் மனைவி தனது முந்தைய சிகிச்சை விபரங்களையும் பிந்தைய விபரங்களையும் வெளியிட்டு அது உண்மை என்றால் இந்த 2000 நபர்களும் தங்களோடு தொழிலை விட்டுவிடுவார்களா ?


swamy
நவ 29, 2024 15:27

சித்து வுக்கு சித்த மருத்துவம் வேலை செய்ததது. இதுவே உ‌ண்மையான மருத்துவம். அது டுபாக்கூர்.....


Senthoora
நவ 29, 2024 14:11

ஓ, நீதான் அந்த டாக்டரோ?


visu
நவ 29, 2024 13:36

சித்து மனைவி சொன்னது தவறாக கூட இருக்கலாம் ஆனால் இதெற்கெல்லாம் ஆதாரம் கேட்டு வழக்கு போடுபவர்கள் ஆங்கில மருத்துவம் குணப்படுத்துகிறதா என்பதெற்க்கு ஆதாரம் கேட்டு வழக்கு தொடுப்பார்களா ? எல்லாம் தூண்டப்பட்ட செயல்போல தெரிகிறது


முக்கிய வீடியோ