உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா: இவிஎம் மெஷினை உடைத்த பா.ஜ.,வேட்பாளர் கைது

ஒடிசா: இவிஎம் மெஷினை உடைத்த பா.ஜ.,வேட்பாளர் கைது

புவனேஸ்வர்: வாக்குச்சாவடியில்தேர்தல் அதிகாரியுடன் ஏற்பட்ட தகராறின் போது இவிஎம் இயந்திரத்தை உடைத்ததாக பா.ஜ., வேட்பாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்று வருகிறது.ஒடிசா மாநிலத்தில் உள்ள பார்லி., தொகுதிக்கு நான்காம் கட்டம் முதல் ஏழாம் கட்டம் வரையில் நான்கு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுகிறது. இந்நிலையில் மாநில சட்டசபைக்கான தேர்தலில் குர்தா சட்டசபை தொகுதிக்கு பாஜ., சார்பில் பிரசாந்த் ஜக்தேவ் வேட்பாளராக போட்டியிடுகிறார். மாநிலத்தல் நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தல் நேற்று (25.05.2024) நடைபெற்றது.போலாகாட் தொகுதிக்கு உட்பட்ட கவுன்ரிபட்னாவில் பிரசாந்த் ஜக்தேவ்தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றார். அப்போது வாக்குபதிவு இயந்திரம் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்ததால் இது குறித்து தேர்தல் அதிகாரியுடன் கேட்டறிந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் இவிஎம் மெஷினை வேட்பாளர் இழுத்ததாக கூறப்படுகிறது.இதில் மெஷின் பழுதானது .சம்பவம் குறித்து தேர்தல்அதிகாரி போலீசில்புகார் அளித்தார். புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் ஜக்தேவ் சிறையில் அடைக்கப்பட்டார். ஜக்தேவ் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.தேர்தல் அதிகாரி பல வாக்காளர்களிடம் தவறாக நடந்து கொண்டார், வேட்பாளரிடமும் அவ்வாறே செய்தார்,' என்று பா.ஜ.,குற்றம் சாட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை