உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல்லாரி சிறையில் தர்ஷனுக்கு டிவி வழங்க அதிகாரிகள் முடிவு

பல்லாரி சிறையில் தர்ஷனுக்கு டிவி வழங்க அதிகாரிகள் முடிவு

பல்லாரி கொலை வழக்கில்- சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷனின் கோரிக்கையை ஏற்று, அவரது அறைக்கு, 'டிவி' வழங்கப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் தர்ஷன். இவர், தன் தோழி பவித்ராவுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதற்காக ரேணுகாசாமி என்பவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷன், பவித்ரா உட்பட 15 பேருக்கு எதிராக 4,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிறை விதிகளுக்கு மாறாக சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியாகின. இதை தொடர்ந்து அவர் பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். கொலையில் தொடர்புடைய மற்றவர்கள் வெவ்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.இந்நிலையில், பல்லாரி சிறையில் உள்ள தர்ஷன், தன் வழக்கு குறித்த விபரங்களை அறிவதற்காகவும், வெளியுலக செய்திகளை தெரிந்து கொள்வதற்காகவும் தன் அறைக்கு டிவி வழங்கும்படி சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். சிறை விதிகளுக்கு உட்பட்டு இதை பரிசீலித்த அதிகாரிகள், அவரது அறைக்கு டிவி வழங்க அனுமதி அளித்துள்ளனர்.நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. குற்றப்பத்திரிகையில் நேற்று வெளியான தகவல்:சித்ரதுர்காவில் இருந்து ரேணுகாசாமியை காரில் பட்டனகெரே ஷெட்டிற்கு கடத்தி வந்ததும், அவரை தர்ஷன் தாக்கி உள்ளார். சிறிது நேரம் கழித்து, 'எனக்கு பசிக்கிறது' என, ரேணுகாசாமி கூறி உள்ளார். அவருக்கு, தர்ஷன் சிக்கன் பிரியாணி கொடுத்துள்ளார்.இரண்டு வாய் சாப்பிட்ட பின் தான், பிரியாணி என்று தெரிந்து, அதை துப்பியதுடன், 'பிரியாணி சாப்பிட மாட்டேன்' என கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த தர்ஷன், 'உணவை கீழே துப்புகிறாயா' என கேட்டு, மீண்டும் தாக்கி உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 08, 2024 12:25

எப்படியும் நமது மாண்புமிகு நீதிபதிகள் இவரை சாட்சியங்கள் சரியாக இல்லை சரியாக நிரூபிக்க படவில்லை என காரணம் கூறி இவரை விடுதலை தான் செய்ய போகிறது. நடிகன்னா சும்மாவா.


RAMAKRISHNAN NATESAN
செப் 08, 2024 09:58

அவன் என்ன கேட்டாலும் ஏற்பாடு பண்ணிக்கொடுக்க போறீங்க ன்னு புரியுது .........


Shekar
செப் 08, 2024 09:40

தாஜ் ஹோட்டலுக்கு போட்டியாக சிறைகள் செயல்பட துவங்கியுள்ளன.


அப்பாவி
செப் 08, 2024 09:15

சிரிப்பு போலீஸ். சிரிப்பு நீதி மன்றம். சிரிப்பு அரசாங்கம். ஊரே சிரிப்பா சிரிக்கிது.


Kasimani Baskaran
செப் 08, 2024 07:49

சுதந்திரத்துக்காக பாடுபட்ட ஒரு சிலர் அந்தமான் தனிமை சிறையில் இருந்தார்கள் - ஒரு சிலர் முதல் வகுப்பு சிறையில் அரண்மனையில் இருந்து கடிதம், புத்தகம் போன்றவற்றை எழுதி சரித்திரம் படைத்தார்கள். அதே போல ஒரு நடிகருக்கு டீவி வழங்குவதால் குடிமுழுகிப்போவது கிடையாது என்ற அடிப்படையில் கொடுக்கலாம். அவர் என்ன செபா போல நியூஸ் கவரேஜா கேட்கிறார். கலிகாலம்டா...


S S
செப் 08, 2024 11:24

அப்படி தனிமை சிறையில் இருந்த சிலர் வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதமும் கொடுத்து விடுதலை ஆகியுள்ளார்கள்


RAJ
செப் 08, 2024 06:34

பச்சைக்கிளிக்கு பேண்ட்டு சர்ட்டு எல்லாம் வாங்கி குடுத்து பத்திரமாக பார்த்து கொள்ளவும்.. முடிந்தால் ஒரு புல்லெட்டும் வாங்கி கொடுக்கவும்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை