உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு, ஒரே தேர்தல்: விரைவில் அறிக்கை தாக்கல்

ஒரே நாடு, ஒரே தேர்தல்: விரைவில் அறிக்கை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : புதிய அரசின் முதல் 100 நாட்கள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய, சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடு முழுதும் ஒரே நேரத்தில், மாநில சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு உயர்மட்டக் குழு அமைத்தது.இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றனர். அரசியல் கட்சிகள், சட்டக் கமிஷன் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்த இந்த உயர்மட்டக் குழு, கடந்த மார்ச் 15ல், ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும், அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறைக்கு பயன்படுத்தும் வகையில், வாக்காளர்கள் அடையாள அட்டைகள், வாக்காளர் பட்டியல்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதற்கான சட்டத்திருத்தத்துக்கு 50 சதவீதத்துக்கு குறையாத மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, மோடி மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார். புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலை தயார் செய்யும்படி, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவை முன் தாக்கல் செய்ய சட்ட அமைச்சகம் திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தத்வமசி
ஜூன் 15, 2024 13:26

உபிசுக்களும், காங்கிரசும் எதிர்த்தால் அது நாட்டுக்கு நல்ல திட்டம் என்று புரிந்து கொள்ளுவோம்.


Balasubramanian
ஜூன் 15, 2024 12:10

எல்லா மாநில மற்றும் மத்திய அரசை கலைத்து விட்டு ஒரே நாளில் ஆன்லைன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே ஆதார் மூலம் தேர்தல் நடைபெற திட்டம் வகுத்தால் - முடிவு சூப்பரா இருக்கும்!


Indian
ஜூன் 15, 2024 10:34

இப்படி சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்


குமரேசன்
ஜூன் 15, 2024 09:36

ஒரு தேர்தலையே ஒரு மாசத்துக்கு நடத்தி, வெயில்னு தெரியாம அட்டவணை? ஆளுங்கட்சி ஜால்ராக்கள்.


Sampath Kumar
ஜூன் 15, 2024 09:24

இந்த ஆரம்பித்து விட்டார்கள் .... இப்படி இருந்தால் நிச்சயம் கடும் விளைவுகளை ஏதிர்கொள்ள நேரிடும்


GMM
ஜூன் 15, 2024 09:05

வாக்காளர்கள் அடையாள அட்டை, பட்டியல் புதிய முறையில் தயாரிக்க வேண்டும். பழைய அட்டை செல்ல கூடாது. தேர்தல் ஆணையம் தன் பணியாளர்கள் கொண்டு தயாரிக்க வேண்டும். உள்ளாட்சி, மாநில, மத்திய அரசு ஊழியர்கள் தயாரித்து பரிந்துரை செய்ய வேண்டும். தேர்தல் ஆணைய ஊழியர்கள் விவரங்கள் உறுதி படுத்தி, வாக்காளர்கள் எண் வழங்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின் ஓட்டு போடும் தொகுதி தெரிவிக்க வேண்டும். சட்டம் திருத்த 50 சதவீதம் குறையாமல் மாநிலங்கள் ஒப்புதல் ஏன்? சரியான காரணம் இல்லாமல் ஒப்புதல் வழங்க மறுத்தால், மாற்று ஏற்பாடு கவர்னர் ஒப்புதல் மூலம் இறுதி செய்ய வேண்டும்.


Chakkaravarthi Sk
ஜூன் 15, 2024 08:42

ரொம்ப சந்தோஷம். ஏற்கனவே பல வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. நீங்கள் லட்சத்தில் ஒருவர் என்ற பெருமிதத்துடன் பெருமை பேசுங்கள். வாழ்க வளமுடன்.


ديفيد رافائيل
ஜூன் 15, 2024 08:38

India முழுதும் MLA, MP and Counselor என அனைத்திற்கும் ஒரே தேர்தல் ஒரே நேரத்துல வைக்கனும். அப்ப தான் ஓட்டுக்காக பணம் கொடுக்குறது குறையும்.


ديفيد رافائيل
ஜூன் 15, 2024 08:36

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வந்தா ஓட்டுக்கு பணம் கொடுக்குறது ஓட்டுக்கு பணம் வாங்குறதும் குறைய வாய்ப்பு இருக்கு.


pmsamy
ஜூன் 15, 2024 08:06

நாங்கள் ஓட்டு போடவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய முடியும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை