உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு; சுதந்திர தினத்தில் சூப்பர் அறிவிப்பு

பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு; சுதந்திர தினத்தில் சூப்பர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்:மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

மாதவிடாய் விடுப்பு

ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அம்மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா கலந்து கொண்டார். அப்போது, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறினார்.மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும், பெண்களின் உடல் ஆரோக்ய நலனில் இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே இரு மாநிலங்கள்

இந்தியாவில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும் தான் மாதவிடாய் விடுமுறை அமலில் இருக்கிறது. பீகாரில் மாதந்தோறும் 2 நாட்கள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அதேபோல, கடந்த 2023ம் ஆண்டு முதல் கேரளாவில் உள்ள பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடந்த 2020 முதல் ஷொமேட்டோவில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் கருத்து

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், அவர்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவரவும் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Paramasivam
ஆக 16, 2024 21:58

If they want to maintain privacy let them avoid taking the leave. It is upto them to decide


metturaan
ஆக 16, 2024 10:46

வரவேற்க பட வேண்டிய அறிவிப்பு... மேற்படி விடுமுறை... அன்றைய தின வீட்டு வேலைகளில் இருந்தும்... விடுப்பு தரப்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்


Ramesh Sargam
ஆக 15, 2024 21:52

விடுப்பு எடுத்துக்கொண்டு பெண்கள் என்ன வீட்டில் ரெஸ்ட் எடுக்கவா போகிறார்கள். கிடைத்த விடுப்பில் காலையில் இருந்து சாயங்காலம் வரையில் ஷாப்பிங், சினிமா, பார்ட்டி என்று சுற்றுவார்கள் பாருங்கள்.


sankaranarayanan
ஆக 15, 2024 21:16

பெண்களுக்கு மாதவிடாய் என்பது அவர்களின் உடம்பில் ஏற்படும் மூன்று நாட்கள் மாறுதல் இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் இவர்களுக்கு தனியாக மாதத்தில் ஒருநாளோ அல்லது மூன்றுநாட்களோ விடுப்பு கொடுத்தால் அது சமூகத்தில் மற்ற அனைவருக்கும் அவர்களைப்பற்றி வெளியே தெரியும்படி ஆகிவிடும் இது தேவையா என்பதை அவர்களிடமே கேட்டு முடிவு எடுத்தால் நன்மையாக இருக்கும்.


தாமரை மலர்கிறது
ஆக 15, 2024 20:38

தேவை இல்லாத அறிவிப்பு. வாக்கு வங்கி அரசியலை பிஜேபி எடுக்க கூடாது.


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 18:14

இருகரம் கூப்பி வரவேற்கிறேன் வாழ்க பல்லாண்டு


subramanian
ஆக 15, 2024 15:24

பெண் வாக்கு வங்கி கவர்ச்சி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 15, 2024 15:55

நம்ம புலிகேசி மன்னர் பெண்களுக்கு டவுன் பஸ்ஸில் இலவச பயணம் எதுக்குங்க கொடுத்தார் ???? வேண்டுதலா ????


SUBBU,MADURAI
ஆக 15, 2024 19:00

பெண்களுக்கு மாதவிலக்கு என்பது மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வு ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் ம்ட்டும் லீவு என்பது எப்படி பொருத்தமாக இருக்க முடியும்? ஏற்கனவே அவர்களுக்கு பேறுகால விடுமுறை மூன்று மாதம் என்பது போன்ற பல சலுகைகள் உள்ளது அப்படி இருக்கும் நிலையில் இது போன்ற ஒரு நாள் விடுமுறை என்பது தேவையில்லாத வேண்டாத வேலை.


Barakat Ali
ஆக 15, 2024 14:51

அதைவிட பெண்கள் செய்ய முடிந்த வேலைகளில் இருக்கும் அனைத்து ஆண்களையும் வேலையை விட்டுத் தூக்கிவிடுங்கள் .... அந்த இடங்களிலும் பெண்களையே பணியமர்த்துங்கள் ....


Jysenn
ஆக 15, 2024 14:51

It is a matter of utmost privacy and now the entire office knows that that particular person is on menstruation. Privacy invaded. Good.Very good.


Sankar Aiyar Viswanathan
ஆக 15, 2024 19:52

Absolutely true


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி