உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல

'லோக்சபா தேர்தலோடு சேர்த்து நாடு முழுதும் உள்ள சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, ஜனநாயகத்திற்கு விரோதமானதும் இல்லை; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் இல்லை' என, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசு செலவினங்களை குறைக்கும் வகையில், லோக்சபாவுக்கும், நாடு முழுதும் உள்ள அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

எதிர்ப்பு

இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வழிவகுக்கும், 129வது அரசமைப்பு சட்டத்திருத்த மசோதாக்களை அதிரடியாக பார்லிமென்டில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடமிருந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு உறுதியான ஆதரவு கிடைத்துள்ளது. அதன்படி, 'லோக்சபா தேர்தலோடு, நாடு முழுதும் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமான காரியம் அல்ல.

வரைவுக்குழு

அவ்வாறு ஒரு சேர தேர்தல் நடத்தினால், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சீர்குலைந்துவிடப் போவதில்லை' என, சட்ட அமைச்சகத்தின் வரைவுக்குழு கருத்து தெரிவித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் இந்த ஆதரவு, மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இதற்கிடையில், நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவு குறித்து, சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கவும் பார்லிமென்ட் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. நேற்று டில்லியில் நடந்த பா.ஜ., மூத்த எம்.பி., சவுத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், இந்த திட்டத்தின் உயர்மட்டக் குழுவின் செயலர் நிதின் சந்திரா, சட்டக் குழுவின் தலைவரான நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி ஆகிய இருவரும் நேரில் வந்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.ஆக்கப்பூர்வமான அணுகுமுறைநல்லமுறையில்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அனைத்து உறுப்பினர்களும் அக்கறையுடன், அதேசமயம் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும் கொண்டிருந்தனர். இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நீதிபதி அஸ்வதி உள்ளிட்டோர் உரிய விளக்கத்தை தந்தனர். இந்த விளக்கங்களை அனைத்து உறுப்பினர்களும் முழுமனதுடன் வரவேற்றனர். நாங்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒரு குழுவாக பணியாற்றி வருகிறோம்.-பி.பி.சவுத்ரி, பார்லி., கூட்டுக்குழு தலைவர்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

malar mannan
பிப் 26, 2025 11:32

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை யார் ஆட்சிக்கு வந்தாலும் மிகப்பெரிய தில்லுமுல்லுக்கு வழிவகுத்துவிடும்.WiFi ,netconnection மூலம் ஒட்டுமொத்த EVM களையும் கட்டுக்குள் கொண்டுவந்து விருப்பம்போல் தேர்தல் முடிவுகளை மாற்றி கொள்ள வழிவகுக்கும்.


Madras Madra
பிப் 26, 2025 12:45

EVM எலக்ட்ரானிக்ஸ் device Wifi digital coommunication ரெண்டும் வேற வேற கட்டுப்படுத்த முடியாது தெரிஞ்சா பதிவிடனும் வதந்தி பரப்ப கூடாது


karthik
பிப் 26, 2025 08:47

உண்மையில் சொல்லப்போனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தான் உண்மையான கூட்டாட்சி .. தனி தனியே தேர்தல் நடத்துவதற்கு பெயர் கூட்டாட்சி இல்லை. ஆரம்பத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று இருந்ததை இஷ்டம் போல மாநில ஆட்சியை களைத்து ஒரு ஒழுங்கை கெடுத்ததும் காங்கிரஸ் கட்சி தான். இன்று நாட்டில் உள்ள அணைத்து சிக்கல்களுக்கும் காங்கிரஸ் காய்ச்சி தான் காரணம்.


Padmasridharan
பிப் 26, 2025 08:38

ஒரே நாடு ஒரே IPCs வருமா


GMM
பிப் 26, 2025 07:01

கூட்டாட்சி என்பது மாநில நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருந்தும். ? சமஸ்தானம் இணைந்து, மாகாணம் ஆன பின் தற்போது நிர்வாக வசதிக்கு மொழி வாரி மாநிலம். மாநில நிர்வாகம் தனி ஆட்சி ஆகாது. ? மாநில நிர்வாகம் - மத்திய அரசுக்கு இடையே கூட்டாட்சி முறை கிடையாது. தத்துவமும் கிடையாது . இந்திய தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டும். நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியான குடியுரிமை பெற்ற ஒருவருக்கு ஒரு வாக்காளர் அடையாள எண் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன் கொடுக்க வேண்டும்.


Indhuindian
பிப் 26, 2025 06:59

அரசாங்கத்துக்கு தேர்தல் செலவு மிச்ச படுத்தலாம் அதுலே ஒன்னும் சந்தேகமே இல்லை. ஆனா இப்படி உ பி களின் வயதிலே அடிக்கிறீங்களே அதுதான் ரொம்ப சங்கடமா இருக்கு.


Palanisamy T
பிப் 26, 2025 06:27

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி, அதுவும் கூட்டாட்சிக்கு எதிரானதல்ல இப்படிதான் பேசுவார்கள். அதற்க்கும் "ஆமாம் சாமி" போட இன்னொருக் கூட்டம்.


Kasimani Baskaran
பிப் 26, 2025 06:14

கூட்டாட்சி என்றால் ஒவ்வொரு ஊராக பணம் கொடுத்து ஓட்டு வாங்க ஏதுவாக சட்டம் இருக்கவேண்டும். இல்லை என்றால் வந்தேறி திராவிடக்கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. வாரம் ஒரு தொகுதி என்று வைத்தால்க்கூட சிறப்பாக பணம் கொடுத்து அணைத்து ஓட்டுக்களையும் வாங்கிவிடுவார்கள்.


kannan
பிப் 26, 2025 05:13

அப்ப, அடுத்த வருசம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுடன் லோக் சபா தேர்தலும் நடத்துவார்களா?


Bahurudeen Ali Ahamed
பிப் 26, 2025 10:27

உங்களுடைய கேள்வி நியாயமானது ஆனால் 2029 க்கு பிறகு அமுலுக்கு வரும் என்று கதை கட்டுவார்கள் விடுங்கள் எவ்வளவுதான் ஆடுவார்கள் பார்ப்போம்


சமீபத்திய செய்தி