உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவு

ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜகதீஷ் டைட்லர் மீது கொலை, கலவரத்தை துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த 1984ல் முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்களுக்கு எதிராக டில்லியில் தாக்குதல்கள் அரங்கேறின. சீக்கியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அது தொடர்பான கலவரத்தை துாண்டிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் ஜகதீஷ் டைட்லருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, கலவரத்தின் போது டில்லி புல் பங்காஷ் குருத்வாரா அருகே தாக்கூர் சிங், பாதல் சிங் மற்றும் குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக ஜகதீஷ் டைட்லர் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு மே மாதம் டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஜகதீஷ் டைட்லர் மீது வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன. அவர் மீது கலவரம் ஏற்படுத்துதல், கொலை உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்யலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

lana
ஆக 31, 2024 10:12

இந்த லட்சணத்தில் உச்சநீதிமன்றம் ஜாமீன் தான்.முக்கியம் ன்னு முக்கி கொண்டு உள்ளது. தப்பி தவறி கூட எவனுக்கும் அரசியல் வியாதிகள் க்கு மட்டும் தண்டனை விதித்து விட கூடாது.


பேசும் தமிழன்
ஆக 31, 2024 09:55

அடப்பாவிகளா.... இப்போது தான் வழக்கே பதிவு செய்கிறீர்களா.... விளங்கிடும்.... இந்த லட்சணத்தில் இருக்கிறது இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை.... பிறகு எப்படி நாடு முன்னேறும் ???


karunamoorthi Karuna
ஆக 31, 2024 09:10

40 வருடங்கள் ஆகிறது தண்டனை வழங்கிய பின்னர் மேல் முறையீடு செய்ய அனுமதி கொடுக்கக் கூடாது தண்டனை நிறைவேற்ற வேண்டும்


Nandakumar Naidu.
ஆக 31, 2024 08:20

சீக்கியர்களை காங்கிரஸ் கட்சியால் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும் காங்கிரஸ் கட்சியில் சீக்கியர்கள் இருப்பதும், அவர்களுக்கு வாக்களிப்பதும் இறந்த சீக்கியர்களுக்கு செய்யும் துரோகமாகும்.


Subburamu K
ஆக 31, 2024 06:56

wasting time and money such cases will never deliver justice to the innocent peoples affected by the organised crime


Sridhar
ஆக 31, 2024 00:59

Only 40vyears have gone by. Wait for another 40 years please


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை