உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்று அனாதை இன்று சாதனை

அன்று அனாதை இன்று சாதனை

உத்தர கன்னடா : மாரத்தான் போட்டியில் பங்கேற்று 5 கி.மீ., துாரம் ஓடிய 'நாய்' ஷிரூருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.உத்தர கன்னடா, கார்வாரில், மாவட்ட போலீஸ் சார்பில் 5 கி.மீ., துாரத்திற்கான மாரத்தான் போட்டி நடந்தது. போதைப்பொருள் ஒழிப்பு, சைபர் குற்றங்கள் இல்லாத கர்நாடகா - 2025 என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்டது. கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் செய்ல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போலீசார், பொது மக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.இப்போட்டியில் ஷிரூர் என்ற நாய் ஒன்றும் கலந்து கொண்டது. இந்த நாய், கடந்த ஆண்டு ஜூலை 16 ம் தேதி, உத்தர கன்னடா, அங்கோலா தாலுகாவில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது தன் குடும்பத்தை இழந்து, அனாதையாக சுற்றி திரிந்தது. அப்போது, சத்தம் போட்டு கொண்டே இருந்தது. இது வீடியோவாக இணையத்தில் பரவியது. இதன் மூலம், இந்நாயை பற்றி அறிந்த, உத்தர கன்னடா போலீஸ் எஸ்.பி., நாராயணன், தனது வீட்டிற்கு எடுத்து சென்று வளர்த்தார். இந்த நாய்க்கு, போலீஸ் நாய்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.நேற்று நடந்த மாரத்தான் போட்டியில், தன்னுடன் இணைந்து எஸ்.பி., பங்கேற்க வைத்து, 5 கி.மீ., துாரத்தை கடந்தார். இதற்காக, நாய் ஷிரூருக்கு வெள்ளிப்பதக்கத்தை எம்.எல்.ஏ., வழங்கினார். தற்போது, இந்நிகழ்வு இணையத்தில் பரவி வருகிறது. நாயை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !