உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்!

ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் இளைஞர்களுக்கு எங்கள் அரசு அரசு வேலை வழங்கியுள்ளது, இது ஒரு சாதனை' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உள்துறை, அஞ்சல், உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில், பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 71 ஆயிரம் பேருக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக,இன்று (டிச.,23) பிரதமர் மோடி பணி நியமன ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் நேற்று இரவு குவைத்தில் இருந்து திரும்பி வந்துள்ளேன். அங்கு இந்திய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. இன்று நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியான தருணம். இது உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய துவக்கம். உங்கள் கடின உழைப்பு இறுதியாக வெற்றி அடைந்துள்ளது.

வளர்ச்சி

இன்று அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பெற்ற, இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். நமது இளைஞர்களின் திறமையை பயன்படுத்தி கொள்ள பா.ஜ., அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதற்கு நீண்ட காலமாக, உழைத்து வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உழைக்க வேண்டும். விண்வெளியில் இருந்து பாதுகாப்பு வரை மற்றும் சுற்றுலா முதல் சுகாதாரம் வரை, இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
டிச 24, 2024 11:35

அப்போ முக்கி முக்கி ரெண்டு கோடி வேலை குடுக்க முப்பது வருஷமாயிடும். 2054 ல் நாமதான் வல்லரசு கோவாலு.


Barakat Ali
டிச 23, 2024 14:13

பல முன்னணி ஆங்கில நாளேடுகளிலும், பல தமிழ் நாளேடுகளிலும் மத்திய அரசு, பொதுத்துறை பதவிகளுக்கான விளம்பரங்கள் வந்தவண்ணம் உள்ளன .... கோவிட் காலத்தில் தடைப்பட்ட ஊழியர் நியமனம் அதன்பிறகு உத்வேகம் எடுத்துள்ளது .... போட்டித் தேர்வுகளுக்கான விளம்பரங்கள் தொடர்ந்து வருகின்றன .... நான் இணைய வழியில் பார்த்தேன் .... நாரசொலி மட்டும் படிக்கும் அறிவிலிகளுக்கு பொய்யாகத்தான் தோன்றும் ....


Narayanan Muthu
டிச 23, 2024 14:01

அதெல்லாம் சரி இதுவரைக்கான 22 கோடி பேருக்கான வேலை வாய்ப்பு எங்கே?


Oviya Vijay
டிச 23, 2024 13:29

காசா பணமா... ச்சும்மா அடிச்சு விடுங்க...


அப்பாவி
டிச 23, 2024 13:29

போஸ்ட் ஆபீஸ் கிளார்க், ஸ்டாம்ப் விக்குற வேலைக்கெல்லாம் இவர் பணி ஆணை குடுத்து மெடல் குத்திக்குற அளவுக்கு வந்தாச்சு. இனிமே சொமாட்டோ, ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்களுக்கும் இவரே பணியாணை குடுக்கலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2024 16:51

விடியல் தாரேன் ன்னு சொல்லிட்டு உன் கோக்குமாக்கு மன்னனும் அதைத்தான் செய்கிறார் .... முன்னேறிய மாநிலம் ...


jayvee
டிச 23, 2024 19:08

நீ தலைகீழா நின்னாலும் போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு தகுதி பெறமுடியாது ..ஏனென்றால் உன்னோட மதிப்பே 200 ஓவாதான்


அப்பாவி
டிச 23, 2024 13:04

எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்...


pmsamy
டிச 23, 2024 13:01

பொய் சொல்றது அரசியல்ல சகஜமப்பா


SANKAR
டிச 23, 2024 12:31

he said 2 crores per year in 2014 election manifesto


Duruvesan
டிச 23, 2024 12:15

மோடி மற்றும் விடியலுக்கு உள்ள ஒற்றுமை, ரெண்டு பெரும் data இல்லாம பீலா


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2024 16:52

புள்ளிவிபரங்கள் சபையில் தெரிவிக்கப்படும் ... .அதுவும் தொடர்புடைய அமைச்சரால் .... ப்ரோடோகால் தெரியாமே ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை