உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்

தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்

மாண்டியா மாவட்டம், கோவிந்தனஹள்ளி கிராமத்தில், பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. 1238ல் ஹொய்சாள ராஜ வம்சத்தின் வீர சோமேஸ்வரா ராஜாவால் இக்கோவில் கட்டப்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாக பராமரிக்கப்படுகிறது.ஹொய்சாளர் காலத்தின் புகழ்பெற்ற சிற்பி ருவாரி மல்லிதம்மா, கோவிலுக்கு பங்களிப்பு செய்ததாக தெரியவந்துள்ளது. கோவிலின் முழு அமைப்பும், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு நுழைவு வாயில்களிலும் துவாரபாலகர்கள் காவலுக்கு நின்றிருப்பர்.

திராவிட மாடல்

இக்கோவிலில் மட்டுமே சிவனின் சத்யோஜதா, தத்புருஷா, வாமதேவா, அகோரா, இஷானா என ஐந்து சன்னிதிகள் அமைந்துள்ளன. ஐந்து சன்னிதிகளும் திராவிட மாடலில் கட்டப்பட்டு உள்ளன.இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், கோவிலின் சுவர்களில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்கள் கொண்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சேஷா, வாமனா, திரிவிக்ரமா, நரசிம்மா, வராஹா, லட்சுமி - லட்சுமி நாராயணா, வேணுகோபால், விட்டோபா, மத்யசா, குர்மா என பல அவதாரங்கள் இடம் பெற்றுள்ளன.பஞ்சலிங்கேஸ்வரா கோவில். சுவற்றில் செதுக்கப்பட்ட விஷ்ணுவின் அவதாரங்கள்.� பஞ்சலிங்கேஸ்வரா கோவில். � சுவற்றில் செதுக்கப்பட்ட விஷ்ணுவின் அவதாரங்கள்.� சுவரில் செதுக்கப்பட்ட விஷ்ணுவின் அவதாரங்கள்.

செல்லலாம்.

ரயிலில் செல்வோர் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.விமானத்தில் செல்வோர், ஹாசனுக்கு சென்று அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் ஸ்ரவணபெளகோலா வழியாக செல்லலாம். அல்லது மைசூரு விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து டாக்சியில் செல்லலாம்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ