உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமாயண காட்சிகளை விளக்கும் பட்டதகல் பாபநாதா கோவில் 

ராமாயண காட்சிகளை விளக்கும் பட்டதகல் பாபநாதா கோவில் 

கர்நாடகாவின் வடமாவட்டங்களில், பாகல்கோட் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்களுடன், பழங்கால கோவில்களும் உள்ளன. அதில் ஒன்று பட்டதகல் பாபநாதா கோவில். இக்கோவில் கி.பி., 680ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால், மனிதர்கள் செய்ய பாவம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த கோவில் முக்தீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.கோவிலின் கட்டட கலை நாகரா பாணியில் கட்டப்பட்டது. கருவறையின் மேல் உள்ள விமானம் நகர பாணியிலும், முகமண்டபம் கிழக்கு நோக்கியும் கட்டப்பட்டு உள்ளது. எட்டு கைகள் கொண்ட மகிஷாசூர மர்த்தினியின், சிற்பமும் இங்கு உள்ளது.சீதாதேவியை மீட்க ராமர் இலங்கைக்கு செல்ல, கடலில் பாறைகளை போட்டு பாலம் கட்டுவது, ஸ்ரீராமரின் முடிசூட்டு விழா, அர்ஜுனன் தவம், கும்பகர்ணன் வானர படையை தாக்குவது போன்ற காட்சிகள், கோவிலின் கல்வெட்டுகளில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. மஹாபாரத காட்சிகளும் கல்வெட்டில் இடம் பெற்று உள்ளன.இந்த கோவிலை சுற்றி விருபாக் ஷா, மல்லிகார்ஜுனா, சங்கமேஸ்வரா, கட்சிதேஸ்வரா, கலகநாதர், சந்திரசேகரா, காசி விஸ்வேஸ்வரா கோவில்களும் அமைந்து உள்ளன. கோவிலின் அருகே மல்லபிரபா ஆறு ஓடுகிறது. ஆற்றில் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்றால், பாவம் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோவிலின் நடை காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து பட்டதகல் 442 கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்து உள்ளது.பஸ்சில் சென்றால் பட்டதகல்லுக்கு நேராக செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் பாதாமி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை காரில் பயணித்து, கோவிலை அடையலாம்.- நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி