உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்னிப்பு கோரிய போன் பே நிறுவனர்

மன்னிப்பு கோரிய போன் பே நிறுவனர்

கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள், 50 சதவீதம் நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.முன்னதாக, கர்நாடக அரசின் இடஒதுக்கீடு மசோதா பற்றி தகவல் வெளியானதும், அதுபற்றி சமூக வலைதளத்தில் போன்பே நிறுவனர் சமீர் நிஹாம் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பலர், அந்நிறுவனத்திற்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதுடன், அந்த செயலியை புறக்கணிக்கப் போவதாகவும் குறிப்பிட்டனர். இந்நிலையில், சமூக வலைதளத்தில் நேற்று அவர் பதிவிட்டுள்ள செய்தியில், 'என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. கர்நாடக மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் அந்த கருத்தை பதிவிடவில்லை; எனவே, கர்நாடக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.- - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை