உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியுடன் பினராயி சந்திப்பு: வயநாடு மறு சீரமைப்புக்கு நிதி கோரினார்

மோடியுடன் பினராயி சந்திப்பு: வயநாடு மறு சீரமைப்புக்கு நிதி கோரினார்

புதுடில்லி: கேரள வயநாடு மறு சீரமைப்புக்கு நிதி ஒதுக்கிட கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.சமீபத்தில் வயநாடு வந்திருந்த பிரதமர் மோடி இங்கு நிலச்சரிவு பாதிப்பிற்குள்ளான பகுதிகளை பார்வையிட்டார்.இந்நிலையில் இன்று டில்லி சென்றிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது வயநாடு மறு சீரமைப்புக்கு தேவையான மத்திய அரசு நிதியை ஒதுக்கி , அதற்கான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் தமங் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S. Gopalakrishnan
ஆக 27, 2024 22:38

இயற்கை பேரிடர்களுக்கு மாநில அரசு பணம் ஒதுக்குவதே கிடையாதா ? கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி அனைத்தும் தில்லியில் இருந்து கொண்டே மோதி ஜி செய்து வருகிறார். வந்தே பாரத் ரயில், மாநிலங்களுக்கிடையே விரைவுச் சாலைகள், மருத்துவ காப்பீடு, விவசாயிகள் உதவித்தொகை, நூறு நாள் வேலைத் திட்டம் மற்றும் என்னவெல்லாம் மோதி ஜி செய்வார் ? மாநில அரசுகள் என்னதான் செய்கின்றன ?


ஆரூர் ரங்
ஆக 27, 2024 22:07

வயநாட்டு சீரழிவுக்கு INDI கூட்டாளி ஆட்சிகளே காரணம். நிதியுதவிக்கு மட்டும் மத்திய அரசா? ஸ்டிக்கர் ஒட்டாவா?


Sivakumar
ஆக 28, 2024 01:42

தெற்கிலிருந்து கொள்ளையடிக்கப்படும் GST எங்கே போகிறது ? அதிலிருந்து நிதியுதவி அளிப்பது அடிப்படை நியாயம். காமாலை கண்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை


சமீபத்திய செய்தி