உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரக்கன்று நடுங்கள்: மோடி அழைப்பு

மரக்கன்று நடுங்கள்: மோடி அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மரக்கன்று நட்டதுடன், 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.டில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில், அரச மரக்கன்றை பிரதமர் மோடி நட்டார். இந்த இயக்கத்தின் வாயிலாக, நாடு முழுதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள தாவது:உலக சுற்றுச்சூழல் தினத்தில், 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் எதிர்காலங்களில் மரக்கன்றை நடுமாறு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு ஈடுபட்டது தொடர்பான புகைப்படத்தை #Plant4Mother என்ற, 'ஹேஷ்டேக்'கின் கீழ் சமூக வலைதளத்தில் பகிரவும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

கஜா
ஜூன் 06, 2024 15:51

என்னமோ இவரை சொல்லித்தான் நாம கேட்டு மரம் நடணுமாம்.


ராஜேந்திரன்,அரியலூர்
ஜூன் 06, 2024 18:26

இந்தியா எப்படி வல்லரசாக முடியும்


Jai
ஜூன் 06, 2024 10:27

சுற்றுப்புற சூழல் தினத்திற்காக மரம் நடுவதை பிரதமர் முன்னின்று ஊக்குவிக்கிறார். இன்னமும் உபீஸ்கள் திமுக வென்று விட்டதாக கனவில் இருப்பதால் பிரதமர் அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது குழப்பம் அடைந்து இங்கு கமென்ட் கொடுக்கிறார்கள். சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு உபீஸ்கள் மரம் நட்டு தங்களுடைய தோல்வியை ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.


அரசு
ஜூன் 06, 2024 08:03

ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க.


சுராகோ
ஜூன் 06, 2024 08:31

நல்லது ஏற்றுக்கொள்ள ஒரு மனம் வேண்டும். அது இல்லை என்று ninaikkiren.


T Annamalai
ஜூன் 06, 2024 08:02

மிகவும் அருமையான திட்டம். மரம் நட வேண்டும் என்பதும், அனைவரையும் ஈடுபடுத்த வேண்டியது என்பதும் மனதிற்கொண்டு, தாயை மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் மனதில் பதியுமாறு இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். நாம் எல்லோரும் மரம் நட்டு, நமது தாய் மண்ணிற்கு மரியாதை செய்வோம்.


Priyan Vadanad
ஜூன் 06, 2024 06:59

ஆரம்பிச்சிட்டாரையா கொரானாவுக்கு மணியடிச்ச மாதிரி ஹேஷ்டாக் போட்டோ .... விளம்பரம். எல்லோரும் ஒரு போட்டோகிராபரை தோளில் சுமந்துகொண்டு போகவேண்டியதுதான். பிரதமருக்கென்ன சுற்றி சுற்றி விளம்பர விற்பன்னர்கள்.


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜூன் 06, 2024 08:04

அப்பத்துக்கு மதம் மாறிய கும்பலுக்கு மோடி எதைச் செய்தாலும் வயிறு எரிகிறது ஹூம் என்ன செய்ய இன்னும் ஐந்து வருடத்திற்கு அவர்தான் பிரதமர் அதனால் புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.?


அருணாசலம் வடவேடம்பட்டி
ஜூன் 06, 2024 06:57

ஐயா நீங்க மரக்கன்று வைக்க சொல்றீங்க ஆனால் எங்களது கிராமத்தில் எங்களது கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஆர்டர் வேண்டும் என்று சொல்கிறார் நாங்கள் எப்படி மரக்கன்று நடுவது கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி உள் வட்டம் வடவேடம்பட்டி கிராமம்


மேலும் செய்திகள்