உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை கங்கனாவை அறைந்த பெண் போலீஸ் அதிரடி கைது

நடிகை கங்கனாவை அறைந்த பெண் போலீஸ் அதிரடி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: நடிகையும், லோக்சபா எம்.பி.,யுமான கங்கனாவை சண்டிகர் விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர் நேற்று கைது செய்யப்பட்டார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஹிமாச்சலின் மண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா.இவர், நேற்று முன்தினம் ஹிமாச்சலில் இருந்து சண்டிகர் வழியாக டில்லிக்கு சென்றார். சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து, கங்கனா விமானம் ஏறச் சென்ற போது, அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர், கங்கனாவை கன்னத்தில் அறைந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை கங்கனா விமர்சித்திருந்தார். 100 ரூபாய்க்காக பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக கூறியிருந்தார். இந்த பேச்சிற்காகவே அவரை அறைந்ததாகவும், அந்த போராட்டத்தில் தன் தாயும் பங்கேற்றதாகவும் குல்வீந்தர் கவுர் கூறினார்.இந்த சம்பவத்தை அடுத்து, குல்வீந்தர் கவுர் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், சண்டிகர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நேற்று அவர் கைது செய்யபட்டார். தன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காத பாலிவுட் திரைத்துறையை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில், 'என் மீது விமான நிலையத்தில் நடந்த தாக்குதலை நீங்கள் அனைவரும் கொண்டாடி இருப்பீர்கள் அல்லது மவுனமாக இருப்பீர்கள். 'ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் கூறிய ஏதாவது ஒரு கருத்துக்காக நாட்டில் எங்கேனும் உங்கள் மீதோ அல்லது உங்கள் குழந்தை மீதோ தாக்குதல் நடக்கலாம். அப்போதும் உங்களின் கருத்து சுதந்திரத்திற்காக நான் தான் குரல் கொடுப்பேன்' என கூறியிருந்தார். பின் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

பாலிவுட்டை விமர்சித்த கங்கனா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

KK RANGAN
ஜூன் 08, 2024 16:28

சீக்கிய பெண் இந்திராவை கொன்ற சீக்கிய அரசு காவலாளி செய்த அதே குற்றத்தை செய்துள்ளாள்...


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 12:30

கைக்கூலி தரகர்களின் போராட்டம் தோல்வி. ஆத்திரம் தாங்கமுடியாமல் ஏவிவிட்டுள்ளனர்.. இந்த காவலருக்கு அடுத்த இடைதேர்தலில் காங் சீட் கிடைக்கும்.


பேசும் தமிழன்
ஜூன் 08, 2024 11:26

சிங்கம் படத்தில் ஒரு சீன் வரும்.........அதனால் தான் அடித்தோம் என்று கூறுவார்கள்... அது போல் தான் இதுவும் இருக்கிறது.


Rangs
ஜூன் 08, 2024 02:27

ஹிந்துக்களின் மனதை காயப் படுத்திய திமுகவினரை, என்ன செய்யலாம்..


Shiva
ஜூன் 08, 2024 06:41

மறுபடியும் அவர்களுக்கே ஓட்டை போட்டவர்கள் தானே


தாமரை மலர்கிறது
ஜூன் 08, 2024 01:41

பெண் என்றும் பார்க்காமல் கங்கானாவை கொடூரமாக தாக்கிய போலீஸ் விரைவில் பத்து வருட ஜெயில் தண்டனை அனுபவிப்பார்.


Priyan Vadanad
ஜூன் 07, 2024 23:39

மற்றவர்ளின் மனதினை காயப்படுத்திய கங்கனாவையும் கைது செய்திருக்கவேண்டும். /கன்னத்தை பழுக்கச்செய்யும்படி அந்த பெண் காவலரை தூண்டிவிட்ட குற்றத்துக்காக கங்கனாவையும் கைது செய்ய வேண்டும்.


Venkat
ஜூன் 07, 2024 23:22

வெறும் அறையோடு விட்டுவிட்டார் அந்த மானமுள்ள காவலாளி என்பது சிறப்பு...


Rangs
ஜூன் 08, 2024 02:29

ஹிந்துக்களின் மனதை காயப் படுத்துபவர்களை, என்ன செய்ய வேண்டும்...


Srinivasan
ஜூன் 07, 2024 23:12

Being a govt service on duty she should not have done this.


Srinivasan
ஜூன் 07, 2024 23:12

Being a govt service on duty she should not have done this.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி