உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு போலீஸ் எச்சரிக்கை 

இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு போலீஸ் எச்சரிக்கை 

பெங்களூரு: பெங்களூரில் மக்கள் அதிகம் கூடும் எம்.ஜி., ரோட்டில் தேவையின்றி கூட்டம் கூட்டியதாக, இன்ஸ்டாகிராம் பிரபலம் யூன்ஸ் ஜாரோவுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.ஜெர்மனியின் பிரங்புருட்டை சேர்ந்தவர் யூன்ஸ் ஜாரோ, 26. இன்ஸ்டாகிராம் பிரபலம். பல்வேறு நாடுகளுக்குச் சென்று, மக்களை சந்திப்பார். யாராவது ஒருவரிடம் சில கேள்விகள் கேட்பார்.அதற்கு சரியாக பதில் சொல்பவர்களுக்கு, விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.சமீபத்தில் கர்நாடகா வந்த யூன்ஸ் ஜாரோ, பெங்களூரு எம்.ஜி., ரோட்டிற்கு நேற்று சென்றார். அந்த வழியாக நடந்து சென்றவர்களிடம், தான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால், ஐபோன் பரிசு தருவதாக கூறினார்.இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அங்கு சென்ற அசோக்நகர் போலீசார், தேவையின்றி கூட்டம் கூட்டியதாக, யூன்ஸ் ஜாரோவை போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்.ஜீப்புக்குள் இருந்தபடி, “நான் சிக்கலில் உள்ளேன்,” என வீடியோ வெளியிட்டார். பின், அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி