உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்புத்திறனாளி இடஒதுக்கீடு சிவில் சர்வீசஸ் பணிக்கு தேவையா?

சிறப்புத்திறனாளி இடஒதுக்கீடு சிவில் சர்வீசஸ் பணிக்கு தேவையா?

புதுடில்லி ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில், உடல்நலக் குறைபாடுகள் உள்ள சிறப்புத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அவசியமா? என, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவின் புனேவில் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர், உடல்நலக்குறைபாடு மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக புகார் எழுந்துள்ளது....இதையடுத்து அவரது இரண்டு ஆண்டு பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வானது குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.இது குறித்து தெலுங்கானா நிதி கமிஷனில் உறுப்பு செயலராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு:மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய மரியாதையுடன் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாற்றுத்திறனாளியாக உள்ள ஒருவரை பைலட்டாக விமான நிறுவனம் நியமிக்குமா, அல்லது அறுவை சிகிச்சை நிபுணராக இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் களப்பணிகள் பெரும் பங்கு வகிக்கும். நேரம் காலம் பார்க்காமல் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும்.மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். இது போன்ற பணிகளுக்கு உடல்தகுதி மிகவும் முக்கியம். நம் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதிக தெம்பு தேவைப்படும்.எனவே, இதுபோன்ற பணிகளில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்புத் திறனாளிகள் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
ஜூலை 23, 2024 20:27

டிஸ்ட்ரிக் மாஜிஸ்திரேட் ஆகவும் கலவரங்களின் போது போலீஸார் உடனும் இணைந்து பணியாற்ற வேண்டிய கலெக்டர் மாற்று திறனாளி பார்வை குறைபாடு கொண்டு இருந்தால் தனது பணியை எப்படி சரியாக செய்வார்?


R.Gunasekharan Sekhar
ஜூலை 23, 2024 00:31

சரி thaan


Natarajan Ramanathan
ஜூலை 23, 2024 00:19

நல்ல கேள்விதான். அதுவும் பார்வை குறைபாடு உள்ளவர்களை இந்தமாதிரி பணிகளில் நியமித்தால் அவர்களால் எப்படி திறமையாக பணியாற்ற முடியும்? செவிலியர் மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்வரை பெண்களை மட்டுமே நியமிக்கும் முறைபோல பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் சில எளிமையான பணிகளை ஒதுக்கீடு செய்தால் போதும்.


RADHAKRISHNAN
ஜூலை 22, 2024 21:28

சரியன கேள்வி பதில் தருமா அரசு?


Jysenn
ஜூலை 22, 2024 21:05

If there is an impartial investigation and subsequent termination of the officials who managed to become ias by the virtue of fake certificates and assisted by the connivance of the bureaucrats thousands of new people from the economically weaker section can be accomodated in the ias service.


r ravichandran
ஜூலை 22, 2024 20:37

எதிர் கட்சிகள் கூறும் இந்த வியாபம் ஊழல் குற்றச்சாட்டு ஒரு அடிப்படை ஆதாரம் இன்றி கோர்ட்டில் நிற்கவில்லை, அங்கு மக்கள் மீண்டும் சட்ட மன்ற தேர்தலில் முன்பு இல்லதாவகையில் மிக பிரமாண்ட வெற்றியை கொடுத்தார்கள் . நாடாளுமன்ற தேர்தலில் மொத்த இடங்களையும் பிஜேபி கட்சிக்கு கொடுத்தார்கள். இன்றைய 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட சொல்லமுடியாத நிலை. சொன்ன ஒரு ரபேல் ஊழல் கூட சுப்ரீம் கோர்ட் ஊழல் எதுவும் இல்லை என்று தள்ளுபடி செய்து விட்டது. கூடுதலாக ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு அபீடவிட் தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது.


Barakat Ali
ஜூலை 22, 2024 20:27

பாராட்டுக்கள் ..... கொத்தடிமைகளுக்கு அறிவோ அறிவு ..... எந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள் எந்த ஆட்சியில் பிடிபடுகிறார்கள், எந்த மாநிலத்தில் சலுகை / அதிகாரங்கள் பெற்றார்கள் இதெல்லாம் கவனிப்பதில்லையா ????


Narayanan Muthu
ஜூலை 22, 2024 19:38

மத்யபிரதேசத்தில் பஜக ஆட்சியில் நடந்த வியாபம் ஊழல் போன்றதொரு ஊழல் தேசிய அளவில் அரங்கேற்றப்படுகிறது. பிஜேபி என்றாலே பொய் புரட்டு பித்தலாட்டம் ட்ரிபிள் பி - PPP தான்.


vijai
ஜூலை 22, 2024 20:14

அப்ப காங்கிரஸ் யோகியம்?


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 20:52

ஓடும் வேனை நடுவழியில் நிறுத்தி TNPSC விடைத்தாள்களை நிரப்பி மார்க் போட்ட ஊழல் கழக ஆட்சியில்தான் நடந்தது. ஒரே கோச்சிங் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் சம்பந்தமில்லாத ஊர் தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து தேர்வெழுதி பணியாணை பெற்ற அநியாயத்தை மறைக்க முடியாது.


Barakat Ali
ஜூலை 23, 2024 07:38

உங்களுக்குத்தான் எனது முந்தைய கருத்து .......


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ