உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் பெயரை சொல்லித்தான் அவர் ஜெயித்தார்: தொடர்கிறது வினேஷ் - பிரிஜ் பூஷன் மோதல்

என் பெயரை சொல்லித்தான் அவர் ஜெயித்தார்: தொடர்கிறது வினேஷ் - பிரிஜ் பூஷன் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஹரியானா சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிக்கு எனது பெயரின் செல்வாக்கு தான் உதவியது' என முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்தார்.முன்னாள் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். அவர் 65,080 வாக்குகளை பெற்றார். பா.ஜ., வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6,105 அதிக ஓட்டுக்களை பெற்று வினேஷ் வெற்றி பெற்றார். வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை பிரிஜ் பூஷன் சிங் வெற்றிக்கு எனது பெயரின் செல்வாக்கு தான் உதவியது.

அழிவு நிச்சயம்

என் பெயரை பயன்படுத்தி தான் அவர் வெற்றி பெற்றார். வினேஷ் போகத் எங்கு சென்றாலும், அழிவு அவரை பின்தொடர்கிறது. தேர்தலில் அவருக்கு வெற்றி, காங்கிரசுக்கு அழிவு. இந்த மல்யுத்த வீரர்கள் நாயகர்கள் அல்ல வில்லன்கள். நாட்டு மக்கள் காங்கிரசை தேர்தலில் புறக்கணித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் தேர்தல் களம் முற்றிலும் வேறானது. அங்கு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பிரிஜ் பூஷன் சிங் மீது மல்லயுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். இந்த விவகாரத்தில் நீதி கேட்டு மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டில்லியில் வீதியில் இறங்கி போராடினர். இதன் பிறகு தான், பிரிஜ் பூஷன் சிங் மீது டில்லி போலீசார் பாலியல் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Raman
அக் 10, 2024 07:48

Rs 200 received this morning ??


Lion Drsekar
அக் 09, 2024 19:35

விளையாட்டு என்பது எப்படி விபரீத விளையாட்டாக மாறிவிட்டது . தண்ணீரும் உணவும் காற்றும் இல்லாமல் எல்லோரும் உயிர் வாழலாம் ஆனால் அரசியல் இல்லாமல் வாழ முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம், வந்தே மாதரம்


Jay
அக் 09, 2024 11:50

கருத்துக்கணிப்புகள் கூறியபடி அனைவருமே காங்கிரசு தான் வரப்போகிறது என்று நம்பினார்கள். அதனால்தான் இந்த விளையாட்டு வீரர்களும் அவர்கள் பக்கம் சேர்ந்து போட்டியிட்டார்கள். இப்போது அவர்கள் வருத்தப்படுவார்கள். 10 வருடம் பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுதும் காய்களை சரியாக நகர்த்தி மொத்தமாக பதிவான ஓட்டுக்களில் வெற்றி விகிதம் சில லட்சங்கள் என்ற போதிலும் ஆட்சியைப் பிடித்தார்கள்.


பாமரன்
அக் 09, 2024 09:43

இன்னிக்கு சாபம் கொடுப்பதில் பிரிஜ்பூஷனுக்கும் நம்ம தள பக்கோடாஸ்க்கும் குஸ்தி போட்டி நடக்குது... பொறுத்திருந்து பார்ப்போம் யார் கெலிக்கறான்னு ...


Mario
அக் 09, 2024 09:36

எத்தனை காலம் ஏமாற்ற முடியும்?


HoneyBee
அக் 09, 2024 09:21

தன் சுயநலத்திற்காக தான் போகத் காங்கிரசில் சேர்ந்தார். தன் மீது தவறு வைத்து கொண்டு மற்றவர்களை கேவலமாக பேச கூடாது போகத்...


ஆரூர் ரங்
அக் 09, 2024 09:16

தன்னிஷ்டத்திற்கு நிர்வாகம் வளைந்து கொடுக்காத போதெல்லாம் போலி வீரர்கள் தகாத குற்றச்சாட்டுக்களை கூறுவது வழக்கமாக்கி விட்டது. இது மாறினால் மட்டுமே விளையாட்டுக்களில் நாம் முன்னேற முடியும்.


nv
அக் 09, 2024 08:53

தோல்வி அடைந்தவர்களுக்கு கட்சியில் இடம் கொடுத்தால் கட்சி எப்படி உருப்படும்? முதலில் பெரும் தோல்விகளை மீண்டும் மீண்டும் கொடுக்கும் பப்புவை விரட்டினால் தான் காங்கிரஸ வளரும்..


நிக்கோல்தாம்சன்
அக் 09, 2024 08:50

இந்த பெண்ணால் நமது நாட்டின் பெயர் கெட்டுவிட்டது என்பதனை காங்கோ எப்போது தான் உணருமோ?


Vikki Cse
அக் 09, 2024 19:48

பேச கூடாது ??


Indian
அக் 09, 2024 08:43

... என்பது சரிதான் .


முக்கிய வீடியோ