மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
8 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
9 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
9 hour(s) ago | 9
பெங்களூரு : ''பிரஜ்வல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்கும். அவர் இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை,'' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:வெளிநாட்டுக்கு சென்ற ஹாசன் எம்.பி., - பிரஜ்வல் ரேவண்ணா, இதுவரை அவரது குடும்பத்தினர் உட்பட, யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. பிரஜ்வலை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பது, அவரது குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. அவர் எப்போது வருவார் என்பதும் தெரியாது. அவர் வந்தால் மட்டுமே, எங்களுக்கு அவரை பற்றிய தகவல் தெரியும்.பிரஜ்வல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, கட்சி சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை சரியான நேரத்தில் எடுப்போம். தற்போது விசாரணை நடத்துவது, அரசின் பணியாகும். எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இவர்கள் புளூகார்னர் நோடடீஸ் அளித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். ***
8 hour(s) ago | 7
9 hour(s) ago | 1
9 hour(s) ago | 9