மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
பெங்களூரு : வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவுக்கு, நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார். அவரது மகன் பிரஜ்வல், எந்த நேரமும் நாடு திரும்பி, போலீசில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவில் செயல்படும் ம.ஜ.த.,வை சேர்ந்த, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, 66. ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா எம்.எல்.ஏ.,வான இவரது மகன் பிரஜ்வல், 33. ஹாசன் எம்.பி.,யாக உள்ளார். இந்நிலையில் தந்தை - மகன் மீது வீட்டு வேலைக்கார பெண், கடந்த 27ம் தேதி ஹொளேநரசிபுரா போலீசில், பாலியல் புகார் அளித்தார். இதன்படி இருவர் மீதும், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவானது.இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக தந்தை - மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கிடையில், இன்னொரு வேலைக்கார பெண்ணை கடத்தியதாக, ரேவண்ணா மீது மைசூரு கே.ஆர்.நகர் போலீசில் வழக்கு பதிவானது. இந்த வழக்கும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது. தொடர்பு இல்லை
கைதில் இருந்து தப்பிக்க, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு, ரேவண்ணா தரப்பில் மனு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு பத்மநாப நகரில் தந்தை தேவகவுடா வீட்டில் இருந்த ரேவண்ணாவை, சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள, சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பெண் மறுப்பு
இதற்கிடையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டார். பெங்களூரு சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரித்தனர். ரேவண்ணா தரப்பு தன்னை கடத்தவில்லை என்று கூறினார். ஆனாலும், அந்த பெண் சற்று பதற்றமான மனநிலையில் இருந்ததால், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று காலை சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங், ரேவண்ணாவிடம் விசாரணை நடத்தினார். பெண் கடத்தலுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரேவண்ணா கூறியுள்ளார். வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது பற்றி கேட்ட போது, பதில் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார்.அவரிடம், சிறப்பு விசாரணை குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. நேற்று மாலை 5:30 மணிக்கு, பவுரிங் அரசு மருத்துவமனைக்கு ரேவண்ணாவை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். நீதிபதி முன் கண்ணீர்
பின், கோரமங்களாவில் உள்ள நீதிபதி கஜேந்திரா கட்டிமணி வீட்டில் இரவு 7:30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 'நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை வேண்டும் என்றே கைது செய்துள்ளனர்' என்று, நீதிபதி முன் ரேவண்ணா கண்ணீர் வடித்துள்ளார்.ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு வக்கீல் ஜெகதீஷ் அனுமதி கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதியும், ரேவண்ணாவை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.இதையடுத்து, அவரை மீண்டும் சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். பிரஜ்வல் எங்கே?
இதற்கிடையில், ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வல் துபாய் வந்துள்ளார். அங்கிருந்து பெங்களூரு வந்து, சரண் அடைய அவர் முடிவு செய்திருப்பதாகவும், எந்த நேரத்திலும் அவர் பெங்களூரு விமான நிலையம் வரலாம் என்றும் தகவல் வெளியானது. இதனால் பிரஜ்வலை கைது செய்ய, சிறப்பு விசாரணை குழுவினர், விமான நிலையம் முன்பு காத்து இருந்தனர். ஆனால், நேற்று நள்ளிரவு 12:00 மணி வரை அவர் வரவில்லை. உதவி எண்கள்
பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர் மீது நேரடியாக புகார் அளிக்க தயங்குகின்றனர். இதனால் புகார் அளிக்க வசதியாக 6360938947 என்ற மொபைல் போன் உதவி எண்ணை, சிறப்பு விசாரணை குழு அறிவித்துள்ளது. இந்த நம்பரில் புகார் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியமாக இருக்கும் என்றும், விசாரணை அதிகாரி பிரிஜேஷ்குமார் சிங் கூறி உள்ளார்.பிரஜ்வலால் பெண் போலீசார் சிலரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில் இருக்கும் பெண் போலீசாரை அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்தால், அந்த வீடியோவில் இருப்பது நாங்கள் இல்லை என்று மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.'மிக பெரிய சதி'பவுரிங் அரசு மருத்துவமனை முன் ரேவண்ணா அளித்த பேட்டியில், ''எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், எந்த கரும்புள்ளியும் இல்லை. அரசியல் சதியால் கைது செய்யப்பட்டு உள்ளேன். என் மீது பதிவான பாலியல் வழக்கில் ஆதாரம் கிடைக்காததால், பெண்ணை கடத்தியதாக வேண்டும் என்றே வழக்கு பதிவு செய்துள்ளனர். இது மிகப்பெரிய சதி. எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி என்னிடம் உள்ளது. நீதிபதி முன்பு எல்லாவற்றையும் சொல்வேன்,'' என்றார்.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1