மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
5 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
8 hour(s) ago
பெங்களூரு : மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு, 'கிடுகிடு'வென அதிகரித்தது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், நடப்பாண்டு டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து, பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: கொசு ஒழிப்பு மருந்து
1. மாணவ - மாணவியர் கை, கால்களை மறைக்கும் வகையில் சீருடை அணிய வேண்டும்2. பள்ளிக்கு வருவதற்கு முன், கொசு கடிக்காமல் இருப்பதற்கான கிரீம்களை தடவி கொள்ள வேண்டும்3. டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, பள்ளி மற்றும் பள்ளி வகுப்பறை நோட்டீஸ் போர்டுகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும்4. பள்ளிகளில் குடிநீர் நிரப்பி வைக்கும் தொட்டிகள், கேன்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்5. பள்ளிகளின் எந்த இடத்திலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்6. கட்டடங்களின் டெரஸ் மீது, மழை நீர் சுமுகமாக செல்ல, வழி வகுக்க வேண்டும்7. டெங்கு காய்ச்சல் குறித்து, தினமும் காலை பிரார்த்தனை நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்8. டெங்கு குறித்து விழிப்புணர்வு கருத்துகளை பெற்றோர்களுக்கு, 'வாட்ஸாப்' மூலமாக, தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும்9. மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு மருந்துகளை வழங்க வேண்டும்10. பள்ளிகளின் அக்கம், பக்கத்தில் உள்ள காலி மனைகளில் குப்பை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் பஞ்சாயத்தின் உதவியை பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago | 1
5 hour(s) ago
8 hour(s) ago