உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி குடும்பம் வார்த்தையை நீக்க பிரதமர் வேண்டுகோள்

மோடி குடும்பம் வார்த்தையை நீக்க பிரதமர் வேண்டுகோள்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடியை குடும்பம் இல்லாத நபர் என விமர்சித்திருந்தார்.இதற்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ., அமைச்சர்களும், நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் தங்களின் பெயருக்கு பின்னால், தாங்கள் மோடியின் குடும்பம் என்பதை தெரிவிக்கும் வகையில் 'மோடி கா பரிவார்' என்ற வார்த்தையை சேர்த்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு: என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது, நாடு முழுதும் பலர் சமூக வலைதள கணக்கில், தங்கள் பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் எனப்படும் மோடியின் குடும்பம் என்ற வார்த்தையை சேர்த்திருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தை தந்தது.தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வெற்றியை கொடுத்துள்ளனர். இது சாதனை. இந்த வெற்றியின் வாயிலாக நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி. இனி, மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sivaraman
ஜூன் 12, 2024 13:47

மோடி மோடி என்று தன்னுடைய பெயரை அவரே கூறாமல் இருப்பதும் நன்று .


தமிழ்
ஜூன் 12, 2024 11:55

ஏன் தேர்தல் முடிஞ்சிட்டதனால எடுத்துட சொல்லிட்டாரா.


karthik
ஜூன் 12, 2024 13:51

தமிழ் நாட்டில் எப்படி தேர்தல் முடிந்தால் சாராய ஆலையை மூட சொல்லி சுடாலின் கூட்டம் போராடாதோ.. எப்படி தேர்தல் முடிந்தால் சொத்து வரி மின்சார கட்டணம், பால் கட்டணம் போன்றவை விலை ஏற்றப்படுகிறதோ அப்படி இல்லை இது,,


S.V.Srinivasan
ஜூன் 12, 2024 11:36

லாளுகிட்டயும், பப்புகிட்டயும் நாகரீகரீகத்தை எதிர் பார்க்க முடியுமா? இவர்களை புறம் தள்ளுவோம். வாயில்லா ஜீவன்களின் வாயில் அடித்து அரசு கஜானாவை கொள்ளை அடித்த லாலு மாதிரி ஆட்களிடம் நாகரீத்தை எதிர் பார்ப்பது நம் தவறு.


S.V.Srinivasan
ஜூன் 12, 2024 11:32

லாளுகிட்டயும், பப்புகிட்டயும் நாகரீகத்தை எதிர் பார்க்க முடியுமா. லாலுவை புறம் தள்ளுவோம். வாயில்லா ஜீவன் வயிற்றில் அடித்து அரசு கஜானாவை கொள்ளை அடித்த ஆட்களிடம் நாம் நாகரீகத்தை எதிர் பார்க்க முடியாது.


Velan Iyengaar
ஜூன் 12, 2024 10:50

நினைச்சா குடும்பத்த சேர்த்துக்குறாரு.. நினைச்சா குடும்பத்த உதறி வீசிடுறாரு ....


Velan Iyengaar
ஜூன் 12, 2024 10:49

இனி நாயுடுவும் நிதீஷும் மட்டும் ஹான் குடும்பம் போல ... ஹா ஹா ஹா


Priyan Vadanad
ஜூன் 12, 2024 10:08

கண்ணியமற்ற வார்த்தைகளை சபை குறிப்பிலிருந்து நீக்கும்படி ...


பாமரன்
ஜூன் 12, 2024 08:40

அவர் ஒரு தெய்வப்பிறவி...தெரியும்ல...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை