மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
புதுடில்லி:ஆம் ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் அருகே பா.ஜ.,வின் மகளிர் பிரிவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.தன்னை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில், அவரது தனிச்செயலர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மி ராஜ்யசபா உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் குற்றஞ்சாட்டினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மாலிவாலின் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு நாள் கழித்து, செய்தியாளர் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அக்கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், 'இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்' என்றார்.இந்த விவகாரத்தில் இதுவரை போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் முதல்வர் இல்லம் அருகே நேற்று பா.ஜ.,வினரும் அக்கட்சியின் மகளிர் பிரிவினரும் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ., மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா பேசியதாவது:தன் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.,யான ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைதியாக இருப்பது ஏன்? குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் முன்வர வேண்டும்.இந்த சம்பவம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளிக்க ஸ்வாதி மாலிவால் முன்வர வேண்டும். சம்பவத்தை உறுதி செய்த பிறகு, போலீசார் விசாரணையை துவங்கலாம்.டில்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ஒரு பெண்ணின் மரியாதை சம்பந்தப்பட்ட விவகாரம் இது. அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். சம்பவத்தில் தொடர்புடைய நபர் மீது கெஜ்ரிவால் ஏன் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை?இவ்வாறு அவர் பேசினார்.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1