உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுச்சாவடி வாரியான தரவுகளை வெளியிடுவது குழப்பம் ஏற்படுத்தும்

ஓட்டுச்சாவடி வாரியான தரவுகளை வெளியிடுவது குழப்பம் ஏற்படுத்தும்

புதுடில்லி : 'ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுக்கள் தொடர்பான, '17 சி' படிவத்தை பொதுவெளியில் வெளியிடுவது தவறான செயல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்' என தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.ஓட்டுப்பதிவு நாளின் முடிவில் ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுக்களின் விபரங்களை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் கமிஷனை கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.இதையடுத்து, அது தொடர்பான பதில் மனு நேற்று தேர்தல் கமிஷனால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு விபரங்கள் அடங்கிய '17 சி' படிவத்தை பொது வெளியில் வெளியிட முடியாது. ஏனெனில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களைத் தவிர வேறு யாருக்கும் அதை வழங்க சட்டப்பூர்வ ஆணை இல்லை. இது தொடர்பான விதிகள் கட்டமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. படிவம் 17சி யை முழுமையாக வெளியிடுவது, ஒட்டுமொத்த தேர்தலையும் சீர்குலைக்கும் மற்றும் கேடு விளைவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vadivelu
மே 24, 2024 06:18

இது அவசியம் , வாக்களிக்க வருகிறார்கள், கையொப்பம் வைக்கிறார்கள், நாள் வாக்களிக்க முடியாமல் சென்று விட்டார்களா என்பதை றிய , அப்படி என்ன நடந்தது என்பதை றிய முடியும் பலருக்கு விரலில் மையை வைத்தததும் வாக்கு எந்திரம் ஸ்விடச் ஆன் செய்து இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரிவதில்லை அதை ஆன் செய்யது இருக்கிறார்கள் என்பது வாக்களிப்பவர்களுக்கும், பூத் ஏ ஜெண்டுகளுக்கும் தெரிய வேண்டும் இங்கே சந்தேகம் இருக்கிறது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை