மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
8 hour(s) ago
புதுச்சேரி:புதுச்சேரி, லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர், 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன், 69; வீட்டின் ஒரு பகுதியில் பட்டறை அமைத்து, ஐம்பொன் சுவாமி சிலை செய்து விற்பனை செய்கிறார். கடந்த 2ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்ய தயார் செய்து வைத்திருந்த 50 கிலோ எடை அம்மன் சிலை, 8 கிலோ எடை பித்தளை சிலை மாயமானது.லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிவசங்கரன் வீட்டில் செய்து வைத்திருந்த ஏராளமான சிலைகளில் மேலும், 21 சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த அலெக்ஸ், 21, சிவசங்கரன் வீட்டின் அருகே அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. அலெக்ஸை பிடித்து விசாரித்தபோது, தன் நண்பர்களான நரிக்குறவர் காலனி முத்துப்பாண்டி, 24, மருதுபாண்டி, 25, ராகவா, 23, ஆகியோருடன் சேர்ந்து சிலைகளை திருடியதும், சிலைகளை வாங்க யாரும் முன் வராததால், அவற்றை உருக்கி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.நரிக்குறவர் காலனியில் புதரில் பதுக்கி வைத்திருந்த 23 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, அலெக்ஸ், முத்துப்பாண்டி, ராகவா ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மருதுபாண்டியை தேடி வருகின்றனர்.
2 hour(s) ago | 9
7 hour(s) ago
8 hour(s) ago