உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வரின் கஷ்டங்கள் நீங்க மலை மஹாதேஸ்வராவுக்கு பூஜை

முதல்வரின் கஷ்டங்கள் நீங்க மலை மஹாதேஸ்வராவுக்கு பூஜை

சாம்ராஜ்நகர்: முதல்வர் சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்கள் சரியாக வேண்டும் என, மலை மஹாதேஸ்வரா மலையில் பிரார்த்தனை செய்து, அவரது ஆதரவாளர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.'மூடா' முறைகேடு வழக்கில் சிக்கி, முதல்வர் சித்தராமையா தர்மசங்கடத்தில் நெளிகிறார். இதை பயன்படுத்தி, இவரது பதவியை தட்டிப்பறிக்க சிலர், உள்குத்து வேலை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.நேற்று அமாவாசை. எனவே சாம்ராஜ்நகர் ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலை கோவிலில், யதீந்திரா சித்தராமையா யுவ பிரிகேட் அமைப்பினர், சிறப்பு பூஜை நடத்தினர்.திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை, மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் மஹாதேஸ்வராவை வணங்கினால், சங்கடங்கள் நிவர்த்தியாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. முதல்வருக்கு வந்துள்ள சங்கடங்கள், விரைவில் நீங்க வேண்டும் என, பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை