மேலும் செய்திகள்
அணுசக்தி துறையில் தனியாருக்கு வாய்ப்பு: பிரதமர் மோடி
55 minutes ago
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்
8 hour(s) ago | 49
பெங்களூரு, : ''லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வர வேண்டும்,'' என, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விருப்பம் தெரிவித்தார்.உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் வர வேண்டும் என, நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். ராகுல் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அவரது முயற்சியால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் பிரசாரத்தின்போது, நாட்டில் நிலவும் பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டினார்.பெங்களூரு வந்த ராகுல் முன், கர்நாடகாவில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது குறித்து, இயல்பான விவாதம் நடந்தது. எங்களுக்கு அவர், சில அறிவுரைகள் கூறினார்.வால்மீகி மேம்பாட்டு வாரிய முறைகேடு வழக்கில், மருத்துவ கல்வி அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் பெயரும் அடிபடுகிறது. விசாரணை நேரத்தில் பலரது பெயர்கள் வருவது இயல்பு. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடக்கிறது. விசாரணை அறிக்கை எனது கையில் கிடைக்கும் வரை, என்னால் எதுவும் சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
55 minutes ago
8 hour(s) ago | 49