மேலும் செய்திகள்
தலைமை செயலர் திடீர் மாற்றம்
19-Aug-2024
ஆட்டத்தை கலைக்க துடிக்கும் சீனியர்!
02-Aug-2024
பெங்களூரு,: 'ரெரா' எனும் கர்நாடக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகேஷ்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடக நகர வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலராக இருந்தவர் ராகேஷ்சிங். மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மே 31ம் தேதி, பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.கர்நாடகாவில், 35 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவரை, 'ரெரா' எனும் கர்நாடக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, மாநில அரசு நேற்று முன்தினம் நியமனம் செய்தது.இவர் பொறுப்பு ஏற்கும் நாள் முதல், ஐந்து ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார். இவர், 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்சை சேர்ந்தவர். முக்கியமான பதவி என்பதால், அனுபவம் மிக்க இவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
19-Aug-2024
02-Aug-2024