உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரமேஷ் ஜார்கிஹோளி கிண்டல் லட்சுமி ஹெப்பால்கர் பதிலடி

ரமேஷ் ஜார்கிஹோளி கிண்டல் லட்சுமி ஹெப்பால்கர் பதிலடி

பெலகாவி: ''பா.ஜ., -- எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியை பற்றி, மாநில மக்களுக்கு நன்கு தெரியும்,'' என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பதிலடி கொடுத்துள்ளார்.பெலகாவி அரசியலில் பா.ஜ., -- எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் இடையில் மோதல் உள்ளது.லோக்சபா தேர்தலில் பெலகாவியில் போட்டியிட்ட லட்சுமி மகன் மிருணாள் தோல்வியடைந்தார். இதனால் மகிழ்ச்சியான ரமேஷ், லட்சுமி பெயரை குறிப்பிடாமல் விஷ கன்னிக்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர் என கிண்டலடித்தார்.இதுகுறித்து லட்சுமி பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:நான் விஷ கன்னியாகவோ அல்லது வேறு கன்னியாகவோ இருக்கிறேன். அது பற்றி ரமேஷுக்கு என்ன கவலை. அவர் யார் என்று மாநில மக்களுக்கு நன்கு தெரியும். அவரது கலாசாரத்தை மாநில மக்கள் பார்த்துள்ளனர். எம்.எல்.சி., தேர்தலில் என் சகோதரர் சன்னராஜ் வெற்றி பெற்றதை, ரமேஷால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கடந்த சட்டசபை தேர்தலின் போதும் என்னை தோற்கடிக்க முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு என் தொகுதியான பெலகாவி ரூரல் மக்கள் பதிலடி கொடுத்தனர். தேர்தலில் லட்சுமி வெற்றி பெற்றால், பெரிய நெக்லஸ் கொண்டு வந்து அணிவேன் என்று, ரமேஷ் கூறினார்.நெக்லஸை எப்போது கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். லோக்சபா தேர்தலில் என் மகன் தோற்றது வருத்தம் அளிக்கிறது. இப்போது அவர் விழுந்து விட்டார். ஆனால் அவர் கண்டிப்பாக எழுந்து நிற்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை