உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்மையை உரக்கப் பேசிய ஓவைசி! நெத்தியடி பேச்சுக்கு நெட்டிசன்கள் புகழாரம்

உண்மையை உரக்கப் பேசிய ஓவைசி! நெத்தியடி பேச்சுக்கு நெட்டிசன்கள் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அசாதுதீன் ஓவைசி என்ற பெயரை கேட்டாலே, இவர் ஆளுங்கட்சிக்கு எதிரானவர், மதசார்பு கொள்கை கொண்டவர் என்ற கருத்து நிலவுகிறது. ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தகுதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.,) தலைவரான ஓவைசி சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போனவர். ஆனால், இவர் காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, உண்மை தகவலை விருப்பு, வெறுப்பின்றி பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் தான் உள்ளது என்பதை அவர் துணிச்சலுடன் உரக்கக்கூறியுள்ளார். மதசார்பற்ற கட்சித் தலைவர்கள் என கூறிக்கொள்ளும், காங்கிரஸ் எம்.பி., ராகுல், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட, காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் வார்த்தைகளை அளந்து பேசி வருகின்றனர். ஆனால், ஓவைசி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு உண்மை நிலவரத்தை பேசியுள்ளதால், சமூகவலைதளவாசிகள் அவரை கொண்டாடுகின்றனர்.

நீதி வேண்டும்

பஹல்காம் தாக்குதல் குறித்து ஓவைசி கூறியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மக்களிடம் மன்னிப்பு கூற வேண்டும். சுற்றுலா பயணியரின் பெயர்களைக் கேட்ட பின், அவர்களின் மதம் என்ன என அறிந்தபின், ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர். இதற்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் அரசு, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் ஆதரவு உள்ளது. படுபாதக செயலை செய்த இந்த அயோக்கியர்கள், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ஈன செயல்

இவர்கள் எல்லை தாண்டி எப்படி வந்தார்கள்? இதற்கு யார் பொறுப்பு? பஹல்காம் வந்தவர்கள், ஸ்ரீநகருக்கும் வந்திருப்பார்கள். இவர்கள் பொறுப்பற்ற செயலுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பயங்கரவாதிகளின் இந்த ஈன செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை வரவேற்கிறேன். இது ஒரு அரசியல் விவகாரம் அல்ல. அதனால், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதை ஆதரிப்போம்.

முழு ஆதரவு

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் எந்த நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம். நமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தலாம். இதுபோன்ற ராணுவ நடவடிக்கை எடுக்க சர்வதேச சட்டங்களும் அனுமதிக்கின்றன. இவ்வாறு, ஓவைசி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Nagarajan S
மே 02, 2025 17:43

சபாஷ் ஓவைஸி, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசியல் வியாதிகள் போல மத்திய அரசை குறை கூறாமல் நேர்மையாக பேட்டி அளித்துள்ளார்.


ponssasi
மே 02, 2025 12:30

ஒவைஸீ இவர் ஒரு நம்பகத்தன்மையற்றவர், இந்தியாவில் வாழ்த்துக்கொண்டே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாக ஒப்பாரிவைத்து அரசியல் கட்சி துவங்கி மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார். இந்துக்கள் மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் கடும் கோபத்தில் இருப்பதால் இதுநாள்வரை பாகிஸ்தானை ஆதரித்த ஒவைசி மற்றும் தேசியமாநாடு கட்சி போன்றவை இந்திய நிலைப்பாடு போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் இவர்களிடம் அரசியல் காட்சிகள், இந்திய அரசு மற்றும் இந்துக்கள் கவனமாக இருக்கவேண்டும்


samvijayv
ஏப் 29, 2025 11:45

ஓவைசி அவர்களுக்கு முதலில் நன்றி.., எந்த மதத்திலும் பயங்கரவாதிகளுக்கு அனுமதி இல்லை தயவு கூர்ந்து இதை மதத்தின் பின் புலம் பார்த்து பேசுவதை தவிர்த்து விடுவது நல்லது என் என்றால் பயங்கரவாதம் அது எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிக்க தக்கது. ஆனா பாருங்க இங்கு தமிழ்நாட்டில் மட்டும் பகுத்தறிவு ஜீவிகளும் ஒரு சில நடிகர், நடிகைகளும் சொம்பு தூக்கிக்கொண்டு திரிகிற கூட்டங்களும் உண்டு.


Krishna
ஏப் 27, 2025 22:02

ஒவைஸீக்கு வாழ்த்துக்கள். கர்நாடக காங்கிரஸ் முதல்வருக்கு இந்த தைரியம் இல்லை.


Murthy
ஏப் 27, 2025 21:51

ஒவைஸின் கருத்து பாராட்ட தக்கது


Shankar
ஏப் 26, 2025 22:22

ரொம்பவும் அதிகமாக கூவாதீங்க. இப்போதைக்கு ஒவைசிக்கு நல்லா தெரியும் மோடியின் ஆத்திரம் என்னவென்று. அதனால்தான் இப்படி அடக்கி வாசித்து இருக்கிறார். இதே ஒவைசி தான் மோடியும் யோகி ஆதித்த்யநாத்தும் போய்விட்டால் உங்களை காப்பாற்ற யாரும் இல்லை என்று பாரத ஹிந்துக்களை சொல்லியிருக்கிறார். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை யாரும் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள்.


ameen
ஏப் 27, 2025 11:15

மோடியின் ஆத்திரம் பற்றி மக்களுக்கு நன்கு தெரியுமே..


Senthil
ஏப் 26, 2025 20:29

பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அன்றைய காஷ்மீரை ஆண்ட இந்து மன்னர் தன் இனத்தோடு சேர்ந்து விட வேண்டும் என்று சுயநலமாக எடுத்த முடிவினால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, அதுதான் இன்றுவரை பொதுமக்களை படுகொலை செய்யும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் அடக்குமுறையைக் கையாள்வதால் பலன் இருக்காது.


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 18:25

இவரை துளியும் நம்ப முடியவில்லை. ஒரு வேளை ஷியா, சன்னி பிரிவுகள் காரணமாக இருக்கலாம் .அதனால் இப்படி பேச வாய்ப்பு உள்ளது.


venugopal s
ஏப் 26, 2025 18:09

இந்தப் பேச்சின் மூலம் இவர் திருந்தி விட்டார் என்று நம்பினால் ஏமாற்றம் தான் மிஞ்சும்!


theruvasagan
ஏப் 26, 2025 17:32

முதலை கண்ணீர். இங்கே ஒரு ஒரு கட்சி தேசியம் பேசினால் யாராவது நம்புவார்களா. அதே போல இதுவும் நம்ப முடியாத பேச்சு


புதிய வீடியோ