உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடோடி மக்கள் காலனி  மேம்படுத்த ரூ.100 கோடி

நாடோடி மக்கள் காலனி  மேம்படுத்த ரூ.100 கோடி

 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட விடுதிகளில், அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் இத்துறையின் 30 விடுதிகளுக்காக சொந்த கட்டடம் மாநிலத்தின் 46 நாடோடி சமூக மாணவர்களுக்காக, நான்கு வருவாய் பிரிவுகளிலும் கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவனம் சார்பில் குடியிருப்பு பள்ளிகள் பைலஹொங்கலா தாலுகா சங்கொல்லி, கானாபுரா தாலுகா நந்தகடா கிராமங்களில் 28 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வளர்ச்சி பணிகள் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லுாரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விடுதிகள். இதற்காக தலா 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு. விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல துறை இணைந்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பத்து விடுதிகள் கட்டப்படும் இத்துறைக்கு உட்பட்ட ஹாஸ்டல்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு நாடோடிகள் வசிக்கும் காலனிகளில், வளர்ச்சி பணிகள் செய்ய 100 கோடி ரூபாய். திறன் மேம்பாட்டு துறை சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள், பெங்களூரில் தங்கி படிப்பதற்கு வசதியாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய இரண்டு விடுதிகள் கட்டப்படும் கல்லுாரி படிப்பை முடித்த பின், போட்டி தேர்வுக்கு தயாராக மற்றும் தொழில் துவங்க பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் வேலையின்றி இருப்பவர்கள், நடமாடும் உணவு தொழில் செய்ய வசதியாக, வாகனங்கள் வாங்குவதற்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி.ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு 422 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை