மேலும் செய்திகள்
நிதி ஒதுக்கீட்டில் தாராளம்!
08-Mar-2025
மாதந்தோறும் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும், 'கிரஹ ஜோதி' திட்டத்தை தொடர, 2025 - 26ம் ஆண்டிற்கு, 10,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு நீர்ப்பாசன பம்ப்செட்களுக்கு, நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் தொடரும் கர்நாடகாவில் 13,000 கோடி ரூபாயில், 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்காக, கே.பி.டி.சி.எல்.,லின் ஏழு துணை மின் நிலையங்களில், 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தனியாருடன் இணைந்து செயல்படுத்த, 1,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு 'குசும் - பி' திட்டத்தின் கீழ், சோலார் பம்ப்செட் பொருத்தும் விவசாயிகளுக்கு, பொருளாதார சுமையை குறைக்கும் வகையில், 40,000 பம்ப்செட்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக, 752 கோடி ரூபாய் ஒதுக்கீடு மாநிலத்தில், 8,833 கோடி ரூபாயில், 100 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் கிராம பஞ்சாயத்துகளில், தெரு விளக்குகளின் மின்சார கட்டணத்தை செலுத்தும் சுமையை குறைக்கும் வகையில், 850 கோடி ரூபாயில் புதிய திட்டம் மேற்கொள்ளப்படும் சோலார், பேட்டரியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள, விவசாய நிலங்களை பயன்படுத்தி கொள்வதற்கு விலக்கு அளிக்கப்படும் கர்நாடக மின்சார வினியோக வாரிய நிறுவனத்தில், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை உருவாக்கி, 5,000 கோடி ரூபாய் முதலீடு பெற்று, பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
08-Mar-2025